8இல் வெறும் 1 தானா? இதெல்லாம் கம்மி.. 11 மேட்ச்ல நிரூப்பிக்கலான ரோஹித்தை கழற்றி விடலாம்.. ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாகவும் ஒட்டுமொத்தமாக 12 வருடங்கள் கழித்தும் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அந்த தோல்விக்கு சீனியர் பேட்ஸ்மேன்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் பெரிய ரன்கள் குவிக்காதது முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக கேப்டனாக முன்னின்று பொறுப்புடன் விளையாட வேண்டிய ரோஹித் சர்மா 2வது போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணிலும் இங்கிலாந்து மண்ணிலும் தலா 5 வீதம் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

- Advertisement -

சுமாரான ரோஹித்:

அதற்கு முன்பாக நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியிலும் இந்தியா விளையாட உள்ளது. இந்நிலையில் அந்த 11 போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லையெனில் ரோஹித் சர்மாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் கழற்றி விட வேண்டிய நேரம் வந்துள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில் 2021க்குப்பின் ரோஹித் சர்மா தம்முடைய தரத்திற்கு நிகராக செயல்படவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவில் கடைசியாக 2021ஆம் ஆண்டு காபா மைதானத்தில் விளையாடிய போட்டிக்கு பின் ரோகித் சர்மா இந்தியாவுக்கு வெளியே 8 இன்னிங்ஸில் வெறும் 1 அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். அது ரோகித் சர்மாவின் தரத்திற்கு ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. அடுத்ததாக நமக்கு 11 டெஸ்ட் போட்டிகள் இருக்கிறது”

- Advertisement -

இது தான் உங்க தரமா:

“எனவே அந்தப் போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டனாக ரன்களை குவிக்க வேண்டும். ஏனெனில் 2020க்குப்பின் அவருடைய புள்ளிவிவரங்கள் அந்தளவுக்கு நன்றாக இல்லை. உண்மை என்னவெனில் அவருடைய சுமாரான செயல்பாடுகளால் இந்தியா சொந்த மண்ணிலேயே நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளது”

இதையும் படிங்க: 6 மாசத்துக்கு முன்பே கேரி கிர்ஸ்டன் பற்றி உண்மையான தீர்க்கதரிசி ஹர்பஜன் கருத்து.. பிசிசிஐ கவனிக்குமா?

“அப்படி வரலாறு காணாத தோல்வியை சந்திக்கும் போது பொறுப்புடன் விளையாட வேண்டிய சீனியர்கள் மீது கேள்விகள் எழும். 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற இந்தியாவுக்கு அடுத்த 6 போட்டிகளில் 4 வெற்றிகள் வேண்டும். எனவே அந்த போட்டிகளில் ஒன்று நன்றாக செய்யுங்கள் அல்லது இடைவெளி எடுத்து வெளியேறுங்கள்” என்று கூறினார்.

Advertisement