6 மாசத்துக்கு முன்பே கேரி கிர்ஸ்டன் பற்றி உண்மையான தீர்க்கதரிசி ஹர்பஜன் கருத்து.. பிசிசிஐ கவனிக்குமா?

Harbhajan SIngh
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் போன்ற 2வது தர அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. அதனால் பாகிஸ்தானை சரிவிலிருந்து மீட்டெடுப்பதற்காக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் கேரி கிர்ஸ்டனை அந்நாட்டு வாரியம் தங்களுடைய வெள்ளைப்பந்து அணிகளின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்தது. குறிப்பாக 2011 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு அவர் பயிற்சியாளராக முக்கிய பங்காற்றினார்.

அதே போல உலகக்கோப்பையை வெல்லும் திட்டத்துடன் அவரை பாகிஸ்தான் வாரியம் தங்களுடைய பயிற்சியாளராக அறிவித்தது. ஆனால் அவருடைய தலைமையிலும் 2024 டி20 உலகக் கோப்பையில் அமெரிக்கா போன்ற கத்துக்குட்டியிடம் தோல்வியை சந்தித்து பாகிஸ்தான் வெளியேறியது. அப்போது பாகிஸ்தான் அணியில் ஒற்றுமையில்லாததே தோல்விக்கு காரணம் என்று கிர்ஸ்டன் கூறியிருந்தார்.

- Advertisement -

தீர்க்கதரிசி ஹர்பஜன்:

அதனால் பாகிஸ்தான் போன்ற மோசமான அணியை தாம் பார்த்ததில்லை என்றும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் வெள்ளைப்பந்து அணிகளின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று முன்தினம் கேரி கிர்ஸ்டன் அறிவித்தார். குறிப்பாக பாகிஸ்தான் அணியை தேர்வு செய்வதில் பயிற்சியாளர்கள் தலையிடக்கூடாது என்று அந்நாட்டு வாரியம் முடிவெடுத்துள்ளது.

அந்த முடிவை விரும்பாததால் 2026 ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அவர் 6 மாதத்திலேயே பயிற்சியாளர் பதவியிலிருந்து வெளியேறியுள்ளார். இந்நிலையில் இந்த அறிவிப்பை பார்த்த ஒரு ரசிகர் முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் சொன்ன கருத்து தீர்க்கதரிசி போல் உண்மையாகி விட்டதாக ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதாவது 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மோசமாக தோல்வியை சந்தித்து வெளியேறியது.

- Advertisement -

பிசிசிஐ கவனிக்குமா:

அப்போது ஜூன் 18ஆம் தேதியன்று “பாகிஸ்தான் போன்ற தரமற்ற அணியில் தரமான நீங்கள் இருந்து நேரத்தை வீணடிக்காமல் இந்திய அணிக்கு வாருங்கள்” என்று கேரி கிர்ஸ்டனுக்கு ட்விட்டரில் ஹர்பஜன் சிங் அழைப்பு விடுத்திருந்தார். பாகிஸ்தான் அணியில் கிர்ஸ்டன் இது போன்ற சூழ்நிலையை சந்திப்பார் என்று முன்கூட்டியே அறிந்து தான் ஹர்பஜன் அப்படி ஜூன் மாதமே தெரிவித்திருக்கலாம் என்று அந்த ரசிகர் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: விராட், ரோஹித் கேரியரை முடியுமா தொடருமான்னு அங்க தெரிஞ்சுடும்.. கழற்றி விடும் நேரம் துவங்கியாச்சு.. ஹர்பஜன் சிங்

மேலும் ஹர்பஜன் சொன்னது போல 2011 உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய கேரி கிர்ஸ்டனை மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்த ரசிகர் ட்விட்டரில் கூறியுள்ளார். அதை ஹர்பஜன் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மேற்கோள் காட்டி “நான் சொன்னது உண்மையாகி விட்டது பாருங்கள்” என்ற வகையில் சிரிக்கும் எமோஜியுடன் ட்வீட் போட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement