
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு நியூஸிலாந்து எதிராக தங்களது சொந்த மண்ணில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3 – 1 (5) என்ற கணக்கில் வென்றது. அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. 2வது போட்டி நவம்பர் 19ஆம் தேதி நியூசிலாந்தில் உள்ள நேப்பியர் மைதானத்தில் நடைபெற்றது.
இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்தைத் துவக்கிய போது ஆரம்பத்திலேயே மழை வந்து ஒரு மணி நேரம் தாமதம் செய்தது. அதனால் அப்போட்டி இரு தரப்புக்கும் தலா 34 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.
அந்த 34 ஓவர்களில் முடிந்தளவு போராடிய வெஸ்ட் இண்டீஸ் 244/9 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சாய் ஹோப் அட்டகாசமாக விளையாடி 13 பவுண்டரி 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு 157.97 ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியான சதத்தை அடித்து 109* (69) ரன்கள் குவித்தார். ஆனால் எதிர்ப்புறம் வந்த பேட்ஸ்மேன்களில் யாருமே 25 ரன்கள் கூட தாண்டவில்லை.
அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக நாதன் ஸ்மித் 4, கெய்ல் ஜெமிஷன் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்துக்கு துவக்க வீரர்கள் ரச்சின் ரவீந்தரா 56 (46), டேவோன் கான்வே 90 (84) ரன்கள் அபாரமான துவக்கத்தைக் கொடுத்தார்கள். அதை வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் அதிகபட்சமாக டாம் லாதம் 39* (29), கேப்டன் மிட்சேல் சான்ட்னர் 34* (15) ரன்கள் அடித்துப் போட்டியை முடித்தார்கள்.
அதனால் 33.3 ஓவரில் 248/5 ரன்களை எடுத்த நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் காரணமாக 2 – 0* (3) என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் ஆரம்பத்திலேயே வென்ற நியூஸிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்தது. மறுபுறம் தோல்வியைச் சந்தித்தாலும் அபாரமாக விளையாடிய சாய் ஹோப் ஆட்டநாயகன் விருது வென்றார்.
இதையும் படிங்க: தெ.ஆ அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்தில் அவருக்கு சேன்ஸ் குடுங்க – முகமது கைப் ஆதரவு
அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் 2வது அதிக சதங்கள் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற ஜாம்பவான் பிரைன் லாரா சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். இருவரும் தலா 19 சதங்கள் அடித்துள்ள நிலையில் கிறிஸ் கெய்ல் 25 சதங்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். அத்துடன் ஒருநாள் 2வது வேகமாக 6000 ரன்கள் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பிரைன் லாரா சாதனையை உடைத்துள்ள ஹோப் புதிய சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல் (இன்னிங்ஸ்):
1. சர் விவ் ரிச்சர்ட்ஸ்: 141
2. ஷாய் ஹோப்: 142*
3. பிரைன் லாரா: 155