கிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..!நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..!

toss
Advertisement

சர்வதேச கிரிக்கெட் உலகில் ஆண்டுகள் செல்ல செல்ல பல வித்துமுறைகளும், மாற்றங்களையும் புகுத்தி வருகின்றனர். அதிலும் டி20 தொடர்கள் ஆரம்பித்த காலத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தேறியது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் உள்ளூர் டி20 தொடரில் புது விதமான டாஸ் முறையை அறிமுகபடுத்த உள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடர் போன்றெ ஆஸ்திரேலியாவிலும் பிக் பாஷ் என்ற உள்ளார் டி20 போட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 8-வது சீசன் வருகிற 19-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இந்த கிரிக்கெட் தொடரில் புதிய முறை ஒன்று புகுத்தப்படுகிறது.

வழக்கமாக யார் முதலில் பேட்டிங் அல்லது பந்து வீச்சை தேர்வு செய்வது என்பதை முடிவு செய்ய, நாணயத்தை மேலே சுண்டி விட்டு (டாஸ்), பூவா-தலையா கேட்பார்கள். இதை சரியாக சொல்லும் அணியின் கேப்டன் பேட்டிங்-பந்து வீச்சை தீர்மானிப்பார்.

- Advertisement -

ஆனால் இந்த தொடரில் நாணயத்தை வைத்து ‘டாஸ்’ போடுதல் நீக்கப்பட்டு, பேட்டை மேலே தூக்கி போட்டு முடிவு செய்ய இருக்கிறார்கள். அதாவது பேட்டின் அடிப்பாகம் மற்றும் மேல்பாகம் இவற்றில் எது முதலில் தரையில் படுகிறதோ அதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும். இதற்காக புதிய மட்டை ஒன்றையும் தயாரித்து வருகின்றனர்.

Advertisement