ஐ.பி.எல் புதிய 9 ஆவது அணி. வெளியான முக்கிய அறிவிப்பு – அடுத்த வருஷம் ரசிகர்களுக்கு விருந்து தான்

Ganguly

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பாக நடந்தேறிய இந்த தொடரானது இம்முறை உலகெங்கிலும் ஏற்பட்ட கொரோனோ வைரஸ் காரணமாக எங்கு நடத்தப்படும் ? எவ்வாறு நடத்தப்படும் ? என பல்வேறு சந்தேகங்களுக்கு இடையே பிசிசிஐயின் சரியான வழிகாட்டுதல் படி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று இனிதே நிறைவடைந்தது.

Dubai

இந்நிலையில் அடுத்த ஆண்டு 2021ல் 14 சீசனாக ஐபிஎல் தொடர் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடத்தப்படும் என்றும் அதற்கான வேலைகளை செய்ய இருப்பதாகவும் பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அடுத்த ஆண்டிற்கான சீசனில் ஒன்பதாவது அணியை சேர்க்க பிசிசிஐ திட்டம் உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

மேலும் அடுத்த சீசனுக்கு முன்னர் முழுமையான ஏலத்தை நடத்தவும் வாய்ப்பு உள்ளது. ஏலத்திற்கு முன்பு அந்த ஒன்பதாவது புதிய அணி குறித்து தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒன்பதாவதாக ஐபிஎல் தொடரில் இடம் பெற இருக்கும் அணி குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரை தளமாக கொண்ட ஒரு அணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

IPL

இந்த செய்தி தற்போது வார்த்தை வாயிலாக வலம் வந்து கொண்டிருந்தாலும் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் 9 அணிகள் கலந்து கொண்டால் தொடரில் இன்னும் சுவாரசியம் அதிகரித்து ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

புது அணி உருவாவது தொடர்பாகத் தீபாவளி முடிந்த சில வாரங்களில் அறிவிப்பை பிசிசிஐ வெளியிடும் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. ஒருவேளை இது உண்மை என்றால், மெகா ஏலம் இன்னும் சில மாதங்களில் தொடங்குவது உறுதி என ஐபிஎல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதுகுறித்து அணி உரிமையாளர்களில் ஒருவர் பேசியபோது :

ganguly-bcci 2

“புதிய அணி உருவாகுவது எங்களுக்குத் தெரியாது. ஆனால், அதற்கான சாத்தியம் உள்ளது. இதுகுறித்து, பிசிசிஐ இன்னும் சில வாரங்களில் அறிவிப்பை வெளியிடும். ஒருவேளை, புதிய அணி உருவானால் மெகா ஏலம் நடைபெறுவது உறுதி” எனத் தெரிவித்தார்.