ரூட்டு போட்டது பாகிஸ்தானுக்கு இல்ல, 2024 உலக கோப்பைக்கு – நெதர்லாந்து படைத்த அபார சாதனை, முழுபட்டியல் இதோ

NED vs SA
- Advertisement -

உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக கடந்த அக்டோபர் 26ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கியது. அதில் கோப்பையை வெல்ல 16 அணிகள் களமிறங்கிய நிலையில் முதல் போட்டியிலேயே ஆசிய சாம்பியன் இலங்கையை நமீபியா தோற்கடித்தது உட்பட ஏராளமான எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறின. குறிப்பாக 2 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி கொடுத்த நிலையில் வலுவான இங்கிலாந்தை கத்துக்குட்டி அயர்லாந்து அசால்டாக தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்தது.

SA vs PAk Babar Azam

- Advertisement -

அதே போல் பரம எதிரியான இந்தியாவிடம் கையில் வைத்திருந்த வெற்றியை விராட் கோலியின் அபார ஆட்டத்தால் தாரை வார்த்த பாகிஸ்தான் கத்துக்குட்டி ஜிம்பாப்வேவிடம் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்று அரை இறுதி வாய்ப்பையும் 90% நழுவ விட்டது. மேலும் கோப்பையை தக்க வைக்கும் அணியாக கருதப்பட்ட நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா ரன் ரேட் அடிப்படையில் நூலிழையில் அரை இறுதிக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறி அதிர்ச்சியை சந்தித்தது. அதனால் குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் குரூப் 2 பிரிவில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் அரை இறுதிக்கு செல்ல காத்திருந்தன.

2024 உலககோப்பை ரூட்டு:
ஆனால் அங்கே தான் உச்சகட்ட திரில்லர் திருப்பம் அரங்கேறியது. ஆம் அரையிறுதி வாய்ப்பை 99% உறுதி செய்த தென்னாப்பிரிக்காவை அதனுடைய கடைசி போட்டியில் எதிர்கொண்ட கத்துக்குட்டி நெதர்லாந்து யாருமே எதிர்பாராத வகையில் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து உலக கோப்பையிலிருந்து வெளியேற்றி அதிர்ச்சியை கொடுத்தது. வரலாற்றில் காலம் காலமாக உலகக் கோப்பையில் இது போன்ற முக்கிய தருணங்களில் சொதப்பி வெளியேறும் தென்னாப்பிரிக்கா மீண்டும் ஒருமுறை தன்னைச் சோக்கர் என்பதை நிரூபித்து வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தாலும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அதிர்ஷ்டமாக அமைந்தது.

Pak vs BAn

ஏனெனில் ஒரு கட்டத்தில் கதை முடிந்ததாக கருதப்பட்ட அந்த அணி அதற்கடுத்த 2 வெற்றிகளை பதிவு செய்த நிலையில் எதிர்பாராத விதமாக தென் ஆப்பிரிக்கா வெளியேறியதால் கடைசி போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்து அதிர்ஷ்டத்துடன் அரையிறுதிக்கு தகுதி பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது. மொத்தத்தில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல நெதர்லாந்து மிகப்பெரிய அதிர்ஷ்டத்தையும் வழியையும் ஏற்படுத்தி விட்டு நாடு திரும்பியுள்ளதால் அந்த அணிக்கு பாகிஸ்தான் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

1. ஆனால் பாகிஸ்தானுக்கு மட்டுமல்லமால் தங்களது வருங்காலத்திற்கும் இப்போதே வலுவான ரூட்டை போட்டுவிட்டு நெதர்லாந்து நாடு திரும்பியுள்ளது. ஆம் டி20 உலக கோப்பை அடுத்ததாக வரும் 2024ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.

NED vs Pak

2. அந்த உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் முதல் 8 இடங்களுக்கு இந்த உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றின் 2 பிரிவுகளிலும் முதல் 4 இடங்களைப் பிடித்த 8 அணிகள் நேரடியாக தகுதி பெறும் என்பது ஏற்கனவே ஐசிசி வகுத்துள்ள விதிமுறையாகும்.

- Advertisement -

3. அந்த வகையில் கடைசி நேரத்தில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த நெதர்லாந்து ஜிம்பாப்வேவை இந்தியா தோற்கடித்த உதவியுடன் குரூப் 2 புள்ளி பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் 4வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. அதே புள்ளிகளை பெற்ற வங்கதேசம் 5வது இடத்திற்கும் 3 புள்ளிகளை பெற்ற ஜிம்பாப்வே 6வது இடத்திற்கும் தள்ளப்பட்டது.

4. இதன் வாயிலாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் 2024 ஐசிசி டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றுக்கு நெதர்லாந்து நேரடியாக இப்போதே தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

5. முன்னதாக தொடரை நடத்தும் நாடுகள் என்ற வகையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஏற்கனவே அந்த உலக கோப்பையில் முதல் 2 அணிகளாக தகுதி பெற்றுள்ளன. அத்துடன் இந்த உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் முதல் 8 இடங்களைப் பிடித்த நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

6. அதுபோக தற்போது ஐசிசி தர வரிசையில் டாப் 10 இடத்தில் கடைசி 2 இடங்களில் இருக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளையும் சேர்த்து 12 கிரிக்கெட் அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

Advertisement