பாகிஸ்தான் கிட்ட ஆடுனமாதிரிலாம் எங்ககிட்ட அவரால ஆட முடியாது – நெதர்லாந்து கேப்டன் அதிரடி

NED-Captain
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியும் தங்களது முதலாவது போட்டியை வெற்றிகரமாக விளையாடி முடித்தது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பலப்பரீட்சை நடத்திய இந்திய அணியானது அந்த போட்டியின் இறுதிப்பந்தில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியினை பதிவு செய்திருந்தது.

Ashwin-and-Kohli

- Advertisement -

இந்நிலையில் அதனை தொடர்ந்து இந்திய அணி விளையாடப் போகும் இரண்டாவது ஆட்டமானது இன்று சிட்னி நகரில் நடைபெற உள்ளது. நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று விடும் என்பதனால் இன்றைய போட்டியில் முன்னணி வீரர்கள் சிலருக்கு ஓய்வளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஆனாலும் நெதர்லாந்து அணியை ஒரு கற்றுக் குட்டி அணியாக நாங்கள் கருத மாட்டோம் என்றும் உலகக்கோப்பைக்கு அந்த அணி தகுதி பெற்று இருப்பதால் அவர்களை ஒருபோதும் எளிய அணியாக எண்ணிவிட முடியாது என்று ரோகித் சர்மா கூறியுள்ளார். இந்நிலையில் இந்த இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக பேட்டி ஒன்றினை அளித்துள்ள நெதர்லாந்து அணியின் கேப்டன் எட்வர்ட்ஸ் பேசுகையில் இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் :

Virat Kohli 1

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய வீரர் விராட் கோலி விளையாடிய ஆட்டத்தை எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு மிகச் சிறப்பாக இருந்தது. ஆனாலும் அவர் எங்களை எதிர்த்து அப்படி விளையாட மாட்டார் என்று நம்புகிறேன். ஏனெனில் எங்களது அணியில் உள்ள பந்துவீச்சாளர்களின் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

- Advertisement -

எங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்றெல்லாம் நாங்கள் பெரிய எதிர்பார்ப்பினை வைத்திருக்கவில்லை. எங்கள் மீது எந்த அழுத்தத்தையும் நாங்கள் ஏற்படுத்திக் கொள்ள மாட்டோம். எங்களை பொறுத்தவரை எங்களுடைய இயல்பான கிரிக்கெட்டை விளையாடி ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவதை மட்டுமே நினைப்பாக கொண்டு விளையாடி வருகிறோம்.

இதையும் படிங்க : தினேஷ் கார்த்திக்கோட வாழ்க்கை மாறியதே அவரால தான் – தினேஷ் கார்த்திக்கின் தந்தை பேட்டி

அந்த வகையில் உலகின் மிகப்பெரிய அணியாக பார்க்கப்படும் இந்திய அணிக்கு எதிராக விளையாடும் அளவிற்கு நாங்கள் இன்று வளர்ந்து நிற்கிறோம். அதுவே எங்களுக்கு பெருமிதம் தான். அந்த வகையில் இந்த போட்டியிலும் இந்திய அணிக்கு எதிராக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம் என அவர் அதிரடியாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement