இது ஒன்னு நடந்தா போதும் மொத்த ஐ.பி.எல் தொடருக்கும் ஆப்புதான் – பஞ்சாப் அணி உரிமையாளர் எச்சரிக்கை

Nesswadia
- Advertisement -

ஐபிஎல் தொடர் இந்த வருடம் செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரக நாட்டில் நடக்கிறது. இதற்காக சார்ஜா, அபுதாபி, துபாய் ஆகிய மூன்று மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உயிர் ரீதியான மருத்துவ பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ipl

- Advertisement -

இதற்காக வீரர்கள், தொழில்நுட்ப குழுவினர், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் இதற்கான வேலைகளில் இறங்க இருக்கிறார்கள். பிசிசிஐ இதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இவர்கள் அனைவரும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமானத்தில் ஏறும் முன்னரே இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் அமலுக்கு வந்துவிடும்.

வீரர்கள், நிர்வாகிகள், உதவியாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் இங்கு தங்க வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் யாரை சந்திக்க வேண்டும் என பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் நிர்வாகம் உரிமையாளர்களும் சமீபத்தில் ஒரு வீடியோ கான்பரன்சில் கலந்துரையாடினார்கள்.

kxip

அப்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்… அவர் கூறுகையில்… அணி உரிமையாளர்களான எங்களுக்கு ஐபிஎல் எங்கு நடக்கிறது என்பது மட்டும்தான் தெரியும். ஆனால் இதில் சம்பந்தப்பட்டவர்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் அதிகம் சிந்தித்து வருகிறோம்.

Kxip

இந்த ஐபிஎல் தொடரின்போது சம்பந்தப்பட்ட ஒரு வீரருக்கு கொரோனா ஏற்பட்டாலும் ஐபிஎல் தொடருக்கு மிகப்பெரிய சிக்கல் வந்துவிடும் இதற்காக நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம் என்று கூறினார் நெஸ் வாடியா.

Advertisement