முதல் முறையாக ODI தரத்தை பெற்று சாதித்து காட்டிய நேபால் அணி..

nepal
- Advertisement -

உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடந்துவருகின்றன. இதில்
பாபுவா நியூ குயின்னா அணியும் நேபால் அணியும் மோதின. நேபால் அணி பாபுவா அணியை வென்றதன் மூலம் ஒரு நாள் போட்டிக்கான தரத்தை பெற்றுள்ளது.

Nepal1

- Advertisement -

வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேபால் அணி வெற்றிபெற்றது.நேற்றைய வெற்றிக்கு பின்னர் நேபால் அணி கேப்டன் டிவிட்டரில் “இந்த வெற்றிக்காகவும் அணிக்காகவும் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

பலவருட கனவு பல கடின முயற்சிகளுக்கு பின்னர்,உழைப்பிற்கு பின்னர் தற்போது நினைவாகியிருக்கின்றது. கடைசியாக இப்போது நாம் ஒருநாள் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளோம். இந்த நேபால் கிரிக்கெட் அணிக்காக உழைத்த அனைவருக்கும் மீண்டுமொருமுறை நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். என்று பதிவிட்டுள்ளார்.

nepal3

Advertisement