இவரை வீழ்த்தி விட்டால் இந்திய அணி ஒன்றுமே கிடையாது. இவர் மட்டுமே எங்களது இலக்கு – நியூசி வீரர் நக்கல் பேச்சு

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிரான வெலிங்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விராட் கோலி முதல் இன்னிங்சில் 2 ரன்களிலும், இரண்டாவது இன்னிங்சில் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஒருநாள் போட்டியை தொடர்ந்து தற்போது டெஸ்ட் போட்டியிலும் அவரது பார்ம் கவலைக்கிடமாக இருக்கிறது.

Williamson-1

- Advertisement -

பொதுவாக அனைத்து கிரேட் பிளேயர்களும் இதேபோன்று சரிவை சந்திப்பார்கள் ஆனால் அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவார்கள் என்பது நிதர்சனம் தான். ஆனால் அப்படி வர முடியவில்லை என்றால் அவர்கள் கரியர் முடிந்துவிடும். இந்நிலையில் கடந்த 7 ஒரு நாள் போட்டிகளில் ஒரு அரை சதம் மட்டுமே கோலி அடித்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் தற்போது சரிவை சந்தித்து உள்ளார்.

அதனால் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் தனது முதல் இடத்தையும் இப்போது இழந்துள்ளார் கோலி இந்நிலையில் நியூசிலாந்து அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான நீல் வாக்னர் இது குறித்து கூறும்போது : எந்த ஒரு அணிக்கு எதிராக நான் ஆடினாலும் அதில் முக்கிய வீரர்களை தான் குறி வைப்பேன். அந்த வகையில் இந்திய அணியின் சிறந்த வீரரான கோலியை தற்போது குறி வைத்துள்ளேன். கோலியை வீழ்த்தி விட்டால் இந்திய அணி பலவீனமடைந்து விடும்.

Kohli-2

கோலியை ரன் எடுக்க விடாமல் வறட்சியாக வைத்திருந்தால் இருமுனைகளிலும் அவருக்கு கடுமையான நெருக்கடி கொடுக்க முடியும். அதில் இதுவரை மூன்று முறை வாக்னர் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2013-14 தொடரில் இந்திய அணி நியூசிலாந்துக்கு சென்று ஆடியபோது வாக்னர் வீசிய பந்தில் தவான், கோலி அடுத்தடுத்து அவுட்டாக இந்திய அணி அந்த போட்டியில் தோல்வியும் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement