வெளிநாட்டு வீரர்களுக்கு பலகோடி.. இந்திய வீரரான இவருக்கு ஒரு கோடியா ? – ஆஷிஷ் நெஹ்ரா காட்டம்

Nehra

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் தொடர் இதுவரை 13 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று முடிவடைந்து உள்ளது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான 14வது ஐபிஎல் சீசனுக்காக வீரர்களின் மினி ஏலம் சென்னையில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இந்த ஐபிஎல் ஏலத்தில் பல்வேறு வீரர்களின் விலை மதிப்பு தற்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய வீரர்களை விட வெளிநாட்டு வீரர்களுக்கான மோகம் அதிக அளவில் இருந்தது.

ipl trophy

வெளிநாட்டு வீரர்களை அதிக அளவில் பணம் கொடுத்து ஏலத்தில் எடுத்த அணிகள் இந்திய வீரர்களுக்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனவும் சில கருத்துக்கள் உலாவுகின்றன. குறிப்பாக கிறிஸ் மோரிஸ் 16 கோடிக்கும், மேக்ஸ்வெல் 4 கோடிக்கும் இன்னும் சிலர் 10 கோடிக்கும் அருகேயும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

ஆனால் இந்திய வீரர்களில் 5 கோடிக்கு மேல் ஒரு சிலரே ஏலம் எடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் கிருஷ்ணப்பா கவுதம் சிஎஸ்கே அணிக்காக 9.25 கோடிக்கு ஏலம் போனார். அவரை தவிர மற்ற எந்த இந்திய வீரரும் அதிக அளவுக்கு ஏலம் போகவில்லை. இந்நிலையில் இந்தியாவின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்வை ஒரு கோடிக்கு டெல்லி அணி எடுத்தது.

Umesh

ஏலத்தில் அவரை மற்ற அணிகள் எதுவும் எடுக்க ஆர்வம் காட்டாத நிலையில் ஒரு கோடிக்கு டெல்லி அணி அவரை எடுத்தது குறித்து முன்னாள் வீரரான ஆஷிஷ் நெஹ்ரா தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : எப்படி விளையாடுகிறார்கள் என்று தெரியாத வெளிநாட்டு வீரர்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். ஆனால் இந்திய வீரரான இவருக்கு இவ்வளவு குறைவான தொகையை என்று சாடி இருக்கிறார்.

- Advertisement -

அதேபோன்று கௌதம் கம்பீர் கூறுகையில் உமேஷ் யாதவ் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஏலத்தில் பல இந்திய வீரர்கள் ஏலம் போகாதது குறிப்பிடத்தக்கது.