நீங்க சொல்றது தப்பு. தோனி இல்லனா நீங்க இந்த நிலைமைக்கு வந்து இருக்கமாட்டீங்க – யுவ்ராஜை நேரடியாக எதிர்த்த நெஹ்ரா

Nehra
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யுவராஜ் சிங் தோனி தலைமை குறித்த ஒரு தகவலை வெளியிட்டு ரசிகர்கள் திடுக்கிடும் அளவில் ஒரு சில விஷயங்களை கூறினார். அதாவது தான் விளையாடிய கேப்டன்களில் கங்குலியை தவிர மற்ற அனைத்து கேப்டன்களுடனும் தனக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்று கூறினார்.

Yuvi

- Advertisement -

குறிப்பாக தோனி மற்றும் விராட் கோலியின் தலைமையில் தான் சரியாக ஆள முடியவில்லை என்பதை பற்றியும் பேசினார். கங்குலி தனக்கு பெரிய அளவில் சப்போர்ட் செய்ததாகவும் தோனி மற்றும் விராட் கோலியிடம் அந்த அளவிற்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தார். தற்போது இதுகுறித்து ஆசிஸ் நெஹரா பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :

யுவராஜ் சிங் தோனியின் தலைமையில் தான் நன்றாக ஆடினார். நான் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை பார்த்ததிலிருந்து 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் அவர் பேட் செய்த விதம் மிக அற்புதமாக இருந்தது. அதனை தொடர்ந்து 2011ஆம் ஆண்டு கேன்சரில் இருந்து மீண்டு வந்த பின்னர் அவர் எப்படி வெளுத்துக் கட்டினார் என்பதை நாம் பார்த்திருப்போம்.

yuvidhoni

ஒவ்வொரு வீரருக்கும் தன்னுடைய கேப்டனை பற்றி நன்றாக தெரியும். அதுவும் 16 ஆண்டுகள் ஆடிய பின்னர் யுவராஜ் சிங் இப்படி கூறுகிறார் என்றால் அது எனக்கு தெரியவில்லை . என்னை பொறுத்தவரையில் யுவராஜ் சிங் தோனியின் தலைமையில் தான் நன்றாக ஆடினார் என்று கூறினார் ஆசிஸ் நெஹரா.

- Advertisement -

ஆம் இவர் கூறியதில் ஒரு உண்மை இருக்கிறது. ஏனெனில் புள்ளி விவரப்படி தோனியின் தலைமையில் 104 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள யுவராஜ் சிங் 3077 ரன்களை குவித்துள்ளார். அதேவேளையில் கங்குலியின் கீழ் 110 ஒருநாள் போட்டிகளில் 2640 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Yuvraj

அப்படி இருக்க யுவ்ராஜ் ஏன் அப்படி கூறி உள்ளார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் கங்குலியை அவர் சப்போர்ட் செய்வதற்கு காரணம் அப்போதிருந்த சீனியர் வீரருக்கு பிறகு கேப்டனாகலாம் என்று நினைத்த யுவ்ராஜ் தோனியின் வருகையால் தனது கேப்டன்சி வாய்ப்பை இழந்தார். இதன்காரணமாக இருவருக்கும் அவ்வப்போது மனக்கசப்பு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Advertisement