பும்ரா விக்கெட் எடுக்காததை மட்டும் சொல்லறீங்க ? இவங்க பண்ண தப்பை ஏன் சொல்லல – நெஹ்ரா கேள்வி

Nehra

இந்திய அணியின் இளம் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் யார்க்கர் மன்னன் என்று அழைக்கப்படுபவர். ஜஸ்பிரித் பும்ரா டெத் ஓவர்களில் தனது சிறப்பான பந்துவீச்சை இந்திய அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக கொடுத்து வந்தார். இந்நிலையில் அவரது இந்த சிறப்பான பந்து வீச்சுக்கு ஒரு தடையாக கடந்த செப்டம்பர் மாதம் அவருக்கு ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக அமைந்தது.

Bumrah

இந்த காயத்தினால் கடந்த பல தொடர்களாக அவர் பங்கேற்கவில்லை. மருத்துவர்களின் அறிவுரைப்படி நீண்ட நாட்கள் ஓய்வு எடுத்த அவர் கடந்த மாதம் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்றார். அதன்பிறகு தற்போது நியூசிலாந்து தொடரில் வரை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவர் சோபிக்கவில்லை. 14 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 9 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார்.

அதிலும் குறிப்பாக கடைசியாக 6 போட்டிகளில் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்ததால் அவரது பார்ம் கேள்விக்குறியானது. மேலும் ரசிகர்களும் பும்ராவை சற்று விமர்சிக்கத் தொடங்கினர். மேலும் பும்ராவின் இந்த செயல்பாடு குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்களும் எழுந்தன. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான நெஹ்ரா கூறுகையில் :

Bumrah-2

ஒவ்வொரு தொடரிலும் சிறப்பாக பந்துவீச வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. அவர் காயத்திலிருந்து திரும்பியுள்ளார் அதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லா நேரத்திலும் ஒருவரால் உச்சத்தில் விளையாட முடியாது. ஏன் இந்த தொலைவில் கோலிக்கு கூட சரியாக அமையவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆடும் லெவனில் சிறப்பான வீரர்களை சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும்.

- Advertisement -

வேகப்பந்து வீச்சாளர்களை பொருத்தவரை இந்திய அணியில் பும்ரா தவிர ஷமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார் ஆகியோர் உள்ளனர். மேலும் புதிதாக சைனி போன்ற உள்ளிட்ட வீரர்களும் இருக்கின்றனர். அவர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு கொடுத்து அவர்களை சரியான திறனுடன் வைத்துக் கொள்வதே இந்த சிக்கலுக்கு தீர்வாக அமையும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.