ரோஹித், பண்ட், ராகுல் யாரும் வேணாம். இவரை கேப்டனா போடுங்க – வித்தியாசமான வீரரை தேர்வு செய்த நெஹ்ரா

Nehra
- Advertisement -

இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்க்கும் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி இந்த டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்த பின்னர் டி20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக அடுத்து வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக யார் செயல்படுவார்கள் ? என்று கேள்வி அதிக அளவு எழுந்துள்ளது. இதுகுறித்து பல்வேறு விவாதங்களும் சமூக வலைத்தளங்களில் நடைபெற்று வருகின்றன.

ashwin

மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சூப்பர் 12-சுற்றோடு இந்திய அணி நாடு திரும்ப உள்ளது. அதனையடுத்து நவம்பர் மாதம் 17-ஆம் தேதி துவங்க உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் நிச்சயம் சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்படும். இதன் காரணமாக அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்கள் ? என்று கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

அதற்கு பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சீனியர் வீரரான ரோஹித் மற்றும் இளம் வீரர்களான ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் ஆகியோர் கேப்டன் பதவிக்கு நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆசிஷ் நெஹ்ரா இந்திய அணியின் அடுத்த கேப்டன் குறித்து தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

bumrah 1

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா பெயர் மட்டுமல்லாமல் ராகுல், பண்ட் போன்ற வீரர்களின் பெயர்கள் தான் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து அணிகளிலும் விளையாடும் பும்ராவை ஏன் கேப்டனாக நியமிக்கக்கூடாது ? அவரே அடுத்த இந்திய அணியின் கேப்டன் பணியை கவனிக்க சரியான வீரர் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியின் கனவில் மண்ணை வாரிப்போட்ட ஆப்கானிஸ்தான் அணி – அதிசயம் ஏதாவது நிகழுமா ?

மேலும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் ஏன் கேப்டனாக கூடாது ? இதற்கு ஏதேனும் விதிமுறைகள் உள்ளதா ? நிச்சயம் பும்ரா கேப்டனாக வேண்டும். அவருக்கு போட்டி குறித்த புரிதல் நிறையவே இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து வித்தியாசமாக இருந்தாலும் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது என்றே கூறலாம். மேலும் நவம்பர் 17 ஆம் தேதி நியூஸிலாந்து தொடர் துவங்க உள்ள நிலையில் இந்த தொடருக்கான அணியும், அணியின் கேப்டனும் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement