தினேஷ் கார்த்திக்கு எதிராக நீங்க பண்ணது தவறு தான். பாண்டியாவின் செயல் குறித்து – நெஹ்ரா கூறியது இதோ

Nehra
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் விளையாடி 211 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக இஷான் கிஷன் 76 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 36 ரன்களையும் குவித்து அசத்தினர். அதனைத் தொடர்ந்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 212 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

miller

இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் கடைசி ஓவரில் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் களத்தில் இருந்தனர். அதில் போட்டியின் கடைசி ஓவரின் 5வது பந்தில் பவுண்டரி லைனுக்கு பந்தினை அடித்து ஓடவும் நேரம் இருந்தாலும் அந்த பந்திற்கு சிங்கிள் ஓடாமல் தினேஷ் கார்த்திக்கிற்கு பந்தை எதிர் கொள்ளும் வாய்ப்பை தரமறுத்தார் ஹார்டிக் பாண்டியா.

- Advertisement -

மேலும் சிங்கிள் தர மறுத்து பாண்டியா தானே பேட்டிங் செய்து கடைசி பந்தில் 2 ரன்கள் குவித்தார். இப்படி உலகத்தரம் வாய்ந்த பினிஷராக எதிர்புறத்தில் இருக்கும் தினேஷ் கார்த்திக்-க்கு பாண்டியா சிங்கிள் தர மறுத்து அவரை ஒரு பவுலரை போல ட்ரீட் செய்தது சமூகவலைதளத்தில் பெரிய விமர்சனத்திற்கு உரிய விடயமாக மாறியுள்ளது.

karthik

மேலும் பாண்டியாவின் இந்த செயல் குறித்து ரசிகர்களும் தங்களது விமர்சனங்களை கடுமையாக முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் இந்த செயல் குறித்து குஜராத் அணியின் பயிற்சியாளரான ஆஷிஷ் நெஹ்ராவும் தனது கருத்தினை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஹர்திக் பாண்டியா தினேஷ் கார்த்தி-க்கு சிங்கிள் கொடுக்காதது எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது.

- Advertisement -

ஏனெனில் எதிர் புறத்தில் நிற்பது நான் கிடையாது. உலகின் சிறந்த பினிஷர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக். கட்டாயம் அவருக்கு அந்த சிங்கிளை கொடுத்து இருக்க வேண்டும் என்று தனது பதிலை தெரிவித்துள்ளார். குஜராத் அணிக்காக இந்த ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற பாண்டியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது மட்டுமின்றி அந்த தொடரிலும் மூன்றாவது மற்றும் நான்காவது களமிறங்கி ரன்களை சேர்த்த திமிரினால் இதுபோன்று நடந்து கொள்வதா? என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : எக்ஸ்பிரஸ் வேகம் எல்லாம் ஓகே தான். ஆனா உம்ரான் மாலிக் இதை கத்துக்கனும் – கபில் தேவ் கொடுத்த அட்வைஸ்

அதேவேளையில் ஆர்.சி.பி அணியில் டெத் ஓவர்களில் களமிறங்கி கடைசி 10,15 பந்துகளில் 35 ரன்களை அடித்து தான் ஒரு சிறந்த பினிஷர் என்று நிரூபித்த தினேஷ் கார்த்திக்-க்கு சிங்கிள் வழங்காத பாண்டியாவை விமர்சித்தும், தினேஷ் கார்த்திக்-க்கு ஆதரவாகவும் ரசிகர்கள் தங்களது கேள்விகளை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement