எக்ஸ்பிரஸ் வேகம் எல்லாம் ஓகே தான். ஆனா உம்ரான் மாலிக் இதை கத்துக்கனும் – கபில் தேவ் கொடுத்த அட்வைஸ்

Umran Malik Rahul Dravid
Advertisement

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. ஜூன் 9-ஆம் தேதி துவங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை பதம்பார்த்த தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்று 1 – 0* என ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் இந்தியா 20 ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து 211/4 ரன்கள் சேர்த்தது. இந்தியாவுக்கு இஷான் கிசான் 11 பவுண்டரி 3 சிக்சருடன் அதிரடியாக 76 (48) ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார்.

miller

அவருடன் ருதுராஜ் 23 (15) ஷ்ரேயஸ் ஐயர் 36 (27) கேப்டன் ரிஷப் பண்ட் 29 (16) எனக் களமிறங்கிய அனைவருமே அதிரடியான ரன்கள் சேர்த்தனர். இறுதியில் நீண்ட நாட்களுக்கு பின்னர் அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி 3 சிக்சருடன் 31* (12) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தார். அதை தொடர்ந்து 212 என்ற இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு கேப்டன் தெம்பா பவுமா 10 (8) குயின்டன் டீ காக் 22 (18) பிரிடோரியஸ் 29 (13) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் கடைசியில் ராசி வேன் டெர் டுஷன் 75* (46) டேவிட் மில்லர் 64* (31) என அதிரடியான பினிஷிங் கொடுத்ததால் 19.1 ஓவரிலேயே 212/3 ரன்களை எடுத்து தென்னாபிரிக்கா வென்றது.

- Advertisement -

உம்ரானுக்கு வாய்ப்பில்லை:
முன்னதாக இந்த போட்டியில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் ஹைதெராபாத் அணிக்காக அசத்திய உம்ரான் மாலிக் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. காரணம் 157.0 கி.மீ வேகப்பந்தை வீசி ஐபிஎல் வரலாற்றில் அதி வேகமான பந்தை வீசிய இந்திய பவுலராக சாதனை படைத்த அவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஏனெனில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இவர் வெறும் 22 வயதில் தொடர்ச்சியாக 150க்கும் மேற்பட்ட வேகத்தில் எதிரணி பேட்மேன்களை திணறடித்ததால் இந்திய அணியில் வாய்ப்பு கொடுங்கள் என்று ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் ஜாம்பவான்கள் வெளிப்படையாக கேட்டுக் கொண்டனர்.

umran

இருப்பினும் வேகத்திற்கு ஈடாக பெரும்பாலான போட்டிகளில் உம்ரான் மாலிக் ரன்களையும் வழங்கினார். அதனால் முழுமையான முன்னேற்றத்தை கண்டபின் யோசித்து தான் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் உட்பட ஒரு சில முன்னாள் வீரர்களும் தெரிவித்திருந்தனர். அதன் காரணமாகவும் புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல் போன்ற சீனியர்கள் இருப்பதாலும் எதார்த்த அடிப்படையில் அவருக்கு பொறுமையாகவே வாய்ப்பு வழங்கப்படும் என்று ராகுல் டிராவிட் இந்த தொடருக்கு முன்பாக அறிவித்தார்.

- Advertisement -

சரியான முடிவு:
இந்நிலையில் ரன்களை வழங்கும் விவேகமற்ற வேகத்தில் எந்த பயனுமில்லை என்று தெரிவிக்கும் முன்னாள் ஜாம்பவான் கபில் தேவ் முழுமையான முன்னேற்றத்தை கண்ட பின்பே உம்ரானுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர் தேர்வு செய்யப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி என்றாலும் இது முன்கூட்டியே கிடைத்த வாய்ப்பாகும். இந்த லெவலில் அவருக்கு குறைந்தது 2 – 3 வருட நேரத்தை கொடுக்க வேண்டும்”

Kapil-dev-2

“நாம் பாராட்டும் ஒரு வீரர் அடுத்த வருடத்தில் காணாமல் போய்விடக்கூடாது. அதே சமயம் அவரின் திறமையிலும் எந்த குறையுமில்லை. உம்ரான் மாலிக் தொடர்ச்சியான சூழ்நிலையில் கடினமாக உழைக்க விரும்புகிறேன். அவரின் திறமையை பார்க்கும் எனக்கு அதில் எந்த குறையும் இருப்பதாக தோன்றவில்லை. இருப்பினும் நல்ல தரமான பந்துவீச்சாளர்களிடம் ஆலோசனை பெறுவது, அவர்களின் வீடியோக்களை பார்த்து நுணுக்கங்களை கற்றுக் கொள்வது போன்றவற்றால் அவர் இன்னும் முன்னேற வேண்டும்”

- Advertisement -

“நிறைய பவுலர்கள் வேகமாக வீசினாலும் விக்கெட்டுகள் எடுக்க தடுமாறுவார்கள். ஆனால் இவர் வேகமாக பந்து வீசி விக்கெட்டுக்களையும் எடுக்கிறார். அதனாலேயே அவருக்கு இவ்வளவு சீக்கிரம் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐபிஎல் என்பது நிறைய பேருக்கு தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பை கொடுக்கிறது. இருப்பினும் அவர்களுக்கு 2 – 3 வருடங்கள் அவகாசம் தேவைப்படுகிறது.

umran

நீங்கள் 150க்கும் மேற்பட்ட வேகத்தில் பந்து வீசி 9 என்ற எக்கனாமியில் ரன்களைக் கொடுப்பதில் எந்த பயனுமில்லை. அவர் (உம்ரான்) அதில் தான் முன்னேற வேண்டியுள்ளது. பேட்ஸ்மேன்களின் மனதை புரிந்து கொண்டு யார்கர் பந்துகளை வீசுவது போன்றவற்றை அவர் கற்க வேண்டும். தரமான பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துவீசும் போது அவரின் எக்கனாமி குறையும் என்று நம்பலாம்” என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs RSA : செலக்சனில் தவறு உள்ளது ! தமிழக வீரருக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கல – முஹமது கைப் நியாயமான கேள்வி

அதாவது எடுத்த எடுப்பில் வாய்ப்பு பெற்று 1 வருடத்தில் காணாமல் போவதை விட உழைத்து கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்பு பெற்று நிலையாக நீண்ட நாட்கள் இந்தியாவுக்கு விளையாடுவதே சரியான வழி என்று கபில் தேவ் கூறியுள்ளார். எனவே ஐபிஎல் போன்ற நல்ல தரமான கிரிக்கெட்டில் இன்னும் 2 – 3 வருடங்கள் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்ட பின் அவருக்கு நிரந்தரமான வாய்ப்பு அளிப்பதே சரியான முடிவாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement