IND vs RSA : செலக்சனில் தவறு உள்ளது ! தமிழக வீரருக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கல – முஹமது கைப் நியாயமான கேள்வி

Kaif
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஜுன் 9இல் நடைபெற்றது. டெல்லியில் பரபரப்பாக நடைபெற்ற அப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்த இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் பின்தங்கியுள்ளது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் அற்புதமாக பேட்டிங் செய்து 211/4 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சமீபத்திய ஐபிஎல் தொடரில் தடுமாறிய இஷான் கிசான் 76 (48) ரன்கள் அடிக்க அவருடன் பேட்டிங் செய்த ருதுராஜ் 23 (15) ரன்கள் எடுத்தார்.

IND vs SA

கடைசியில் ஐபிஎல் கோப்பையை வென்று நீண்ட நாட்களுக்குப்பின் அணிக்கு திரும்பியுள்ள ஹர்திக் பாண்டியா 31* (12) ரன்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதனால் 212 என்ற பெரிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு கேப்டன் தெம்பா பாவமா 10 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் அடுத்து களமிறங்கிய பிரிடோரியஸ் 29 (13) ரன்களும் மற்றொரு தொடக்க வீரர் குயின்டன் டி காக் 22 (18) ரன்கள் எடுத்து ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

- Advertisement -

சொதப்பல் பவுலிங்:
அதனால் 81/3 என அந்த அணி தடுமாறியதால் வெற்றி இரு பக்கமும் சமமாக இருந்தது. அந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த ராசி வேன் டெர் டுஷன் – டேவிட் மில்லரை அவுட் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய பவுலர்கள் மாறாக கடைசி 10 ஓவர்களில் மோசமாக பந்துவீசி ரன்களை வாரி வழங்கினர். இடையில் 29 (30) ரன்கள் எடுத்திருந்தபோது கொடுத்த எளிதான கேட்சை ஷ்ரேயஸ் ஐயர் கோட்டை விட்டதை பயன்படுத்திய டுஷன் 75* ரன்களை விளாசி தோல்வியை பரிசளித்தார். அவருடன் சமீபத்திய ஐபிஎல் தொடரில் குஜராத்தின் கருப்பு குதிரையாக செயல்பட்ட டேவிட் மில்லர் 64* (31) ரன்களை விளாசி சிறப்பான பினிஷிங் கொடுத்ததால் 19.1 ஓவரிலேயே 212/3 ரன்களை எடுத்த தென்னாப்பிரிக்கா சூப்பர் வெற்றி பெற்றது.

Shreyas Iyer IND

இப்போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலைமையில் தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்ற ரிஷப் பண்ட் இந்திய பவுலர்களை பயன்படுத்திய விதம் தவறானதாக இருந்தது. குறிப்பாக சமீபத்திய ஐபிஎல் தொடரில் ஊதா தொகையை வென்ற சஹாலுக்கு முழுமையாக 4 ஓவர்களை கொடுக்காத ரிஷப் பண்ட் ஒரு சுழல் பந்து வீச்சாளரான அவரிடம் போய் 3-வது ஓவராக கடைசி ஓவரை வழங்கினார். இந்தத் தொடருக்காக தேர்வுசெய்யப்பட்ட இந்திய அணியில் நிகழ்ந்த அடிப்படைத் தவறே இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

- Advertisement -

கைப் காட்டம்:
ஏனெனில் பொதுவாகவே எந்த ஒரு கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் ப்ளேயிங் லெவனில் 2 சுழல் பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். அந்த இருவரில் ஒருவர் ஆஃப் ஸ்பின் பவுலராகவும் மற்றொருவர் லெக் ஸ்பின் பவுலராகவும் இருந்தால்தான் எதிரணியில் இருக்கும் வலது – இடது கை பேட்ஸ்மேன்களுக்கு மாறிமாறி அச்சுறுத்தும் வகையில் பந்து வீச முடியும். ஆனால் இந்த தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட சுழல் பந்து வீச்சாளர்களில் சஹால், ரவி பிஷ்னோய், அக்சர் படேல் என அனைவருமே லெக் ஸ்பின் பவுலர்களாக இருப்பதால் சுழல் பந்துவீச்சு கூட்டணியில் சமமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட தவறு நிகழ்ந்துள்ள நிலையில் அனுபவம் வாய்ந்த ஆப் ஸ்பின் பந்து வீச்சாளரான தமிழகத்தின் அஷ்வினுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 2 நாடுகளிடம் நல்ல அணி உள்ளது. ஆனால் இந்திய அணியில் சஹால், பிஷ்னோய், அக்சர் ஆகியோர் உள்ளனர். எனவே ஒரே அணியில் 3 லெக்-ஸ்பின் பவுலர்களை வைத்து எங்கே விளையாடுவீர்கள். 3 லெக் ஸ்பின் பவுலர்கள் இருந்தால் எப்படி அணி சமமாக அமையும்”

- Advertisement -

“எனவே அஷ்வின் இந்த அணியில் இல்லாதது எனக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது. 2021 உலக கோப்பையில் இடம் பிடித்த அவர் தற்போது நல்ல பார்மில் உள்ளார். 3 லெக் ஸ்பின் பவுலர்களில் ஒருவரை விடுவித்து அஷ்வினுக்கு வாய்ப்பு வழங்குவது கேப்டனுக்கும் சவுகரியத்தை கொடுக்கும். அவர் தற்போது பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்துகிறார்” என்று கூறினார்.

ashwin 1

அவர் கூறுவது முற்றிலும் நியாயமான கருத்து என்றே கூறலாம். ஏனெனில் 3 லெக் ஸ்பின் பவுலர்கள் ஒரே அணியில் இருப்பது கேப்டனுக்கு எந்த வகையிலும் உதவாது. மேலும் விடாமுயற்சியால் 4 வருடங்கள் கழித்து கடந்த 2021 டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் கம்பேக் கொடுத்த அஷ்வின் சிறப்பாக செயல்பட்ட போதிலும் தென் ஆப்பிரிக்க தொடருக்குப் பின் காயமடைந்து வெளியேறிய பின் அவரை இந்திய அணி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

இதையும் படிங்க : IND vs RSA : கதையே வேற ! சகோதரருக்காக தினேஷ் கார்த்திகை பழி வாங்கினாரா பாண்டியா, ஆதாரத்தை நீட்டும் ரசிகர்கள்

இருப்பினும் சமீபத்திய ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்காக பந்துவீச்சில் அசத்திய அவர் பேட்டிங்கிலும் முதல் முறையாக அரை சதமடித்து ஒரு ஆல்-ரவுண்டரை போல் அசத்தலாக செயல்பட்டார். எனவே கைப் கூறியது போல் எஞ்சிய 4 போட்டிகளில் அவருக்கு வாய்ப்பளித்தால் உண்மையாகவே சிறப்பான முடிவாக இருக்கும்.

Advertisement