இந்திய அணியை எதிர்க்கனுனா அது இவர்களால் மட்டுமே முடியும் – நெஹ்ரா கணிப்பு

Nehra
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த பல ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. தோனி கேப்டனாக இருந்து வெளியேறிய பின்னர் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி வருகிறது. அதிலும் குறிப்பாக 2017 ஆம் ஆணடில் தென் ஆப்பிரிக்க நாட்டிற்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அதன் பிறகு தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. குறிப்பாக 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது.

IND

- Advertisement -

அதுமட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ் தொடர், இந்தியாவில் நடந்த இங்கிலாந்து தொடர் என டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக முக்கியமான தொடர்களை கைப்பற்றி 2017ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்து அசத்தினார்கள். விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் அணி உலகின் நம்பர் ஒன் அணியாக விளங்கி வரும் இவ்வேளையில் கடைசியாக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மட்டுமே தோல்வியை தழுவியது.

அது தவிர இந்திய அணி மிகச்சிறப்பான அணியாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு சமமான ஒரு அணியை தேர்வு செய்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : கடந்த ஐந்து வருடங்களில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக பல்வேறு டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியுள்ளது.

IND

இறுதியாக நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் மட்டும் தோற்று இருந்தாலும் மற்றபடி இந்த ஐந்து ஆண்டுகள் கோலியின் தலைமையில் இந்திய அணி பெற்ற வெற்றிகள் பல இருக்கின்றன. அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : மற்ற அணிகளை விட டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடும் இந்திய அணி எப்போதும் நன்றாகவே செயல்பட்டுள்ளது. இதில் உங்களுக்கு மாற்று கருத்து இல்லை என்று நான் நினைக்கிறேன்.

- Advertisement -

இக்கட்டான நேரங்களில் இந்திய அணியை கேப்டன் கோலி சாமர்த்தியமாக வழிநடத்துகிறார். இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சிறந்த கேப்டனாக இருக்க முடிகிறது என்று கூறினார். இந்நிலையில் இந்திய அணிக்கு சமமான அணி குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போதுள்ள கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் அணி என்றால் அது நியூசிலாந்து அணி மட்டும்தான்.

nz

ஏனெனில் அவர்களால் மட்டுமே இந்திய அணிக்கு எதிராக கடுமையான போட்டியை கொடுக்க முடிகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் கூட இந்திய அணி எதிராக அவர்கள் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றினர். அந்த அளவிற்கு அவர்கள் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாட கூடிய வீரர்கள் எனவே தற்போது உள்ள சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை சமாளிக்க கூடிய ஒரே அணியாக நியூசிலாந்து அணியை தான் கூறுவேன் என நெஹ்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement