இவரால் சி.எஸ்.கே அணியை நிச்சயம் கரை சேர்க்க முடியும். அந்த தகுதி அவரிடம் இருக்கு – நெஹ்ரா ஓபன் டாக்

Nehra

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சிஎஸ்கே அணிக்கு பெரிதாக அமையவில்லை. ஐபிஎல் வரலாற்றில் ஒரு முறை கூட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி அடையாமல் வெளியேறாத ஒரே அணியாக இருந்த சிஎஸ்கே அணி தற்போது பிளேஆப் வாய்ப்பை இழந்துள்ளது. மேலும் இந்த தோல்விகளுக்கு காரணம் சென்னை அணியில் அதிக மூத்த வீரர்கள் இருப்பதுதான் என்று பலரும் வெளிப்படையாகவே கருத்தை தெரிவித்து வந்தனர்.

CSK-1

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆசிஷ் நெஹ்ரா சி.எஸ்.கே மீண்டும் இதே அணியாக சிறப்பாக மாறி அடுத்த ஆண்டு சாதித்துக் காட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் மூன்று முறை கோப்பைகளை வென்ற சிஎஸ்கே அணி 6 முறை இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. இதுவரை ஐபிஎல் சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் சிஎஸ்கே அணி வெளிவருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிஎஸ்கே அணி குறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனிலும் சிஎஸ்கே அணியில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என நினைக்கிறேன். கிரிக்கெட்டில் 30 முதல் 35 வயதுவரை விளையாடுவதில் எந்த ஒரு விஷயமும் இல்லை. தோனி மிகவும் ஸ்மார்ட்டான வீரர். அவர் மீண்டும் இதே வலிமையோடு அடுத்த ஆண்டு அணியை சரியாக நிர்வகித்து சாதித்து காண்பிப்பார்.

மேலும் அவர் மனதளவில் மிகவும் வலிமையான ஒரு நபர். அணியை எவ்வாறு நிர்வகிப்பது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அவருக்கு கேப்டன்சி ஒரு பெரிய சுமையாக இருக்காது என நான் நினைக்கிறேன். இந்த தோல்வி முதல்முறை தான் தோனி அடுத்தமுறை நிச்சயம் சாதித்துக் காட்டுவார். அவருடைய வயது அவருக்கு ஓர் பெரிய பிரச்சனை கிடையாது. ஏனெனில் நானும் 39 வயது வரை விளையாடி இருக்கிறேன்.

- Advertisement -

அதுமட்டுமின்றி மேலும் இன்னும் சில நாட்கள் கூட என்னால் விளையாடி இருக்க முடியும். அதனால் சிஎஸ்கே அணியில் அடுத்த ஆண்டு நிச்சயம் தோனி விளையாடுவார் அதுமட்டுமின்றி வாட்சனும் இருப்பார் என நினைக்கிறேன். அடுத்த ஆண்டும் சென்னை அணி பெரிய மாற்றத்தை செய்யாது என நம்புகிறேன்.

csk 1

சிஎஸ்கே அணியில் உள்ளவர்கள் பெரும்பாலும் 30 முதல் 35 வயது உள்ள வீரர்கள் என பலரும் கூறுகிறார்கள். அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதை அடுத்த சீசனில் நீங்கள் பார்ப்பீர்கள். அடுத்த ஆண்டு அவர்கள் வெற்றிகரமாக திரும்புவார்கள் என நெஹ்ரா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.