கண்டிப்பா யோசிச்சே ஆகனும்.. 10 ஆவது இடத்தை பிடித்து வெளியேறிய பின்னர் – நீதா அம்பானி வருத்தம்

Nita
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் துவங்கிய நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் இறுதி போட்டியில் விளையாட கொல்கத்தா அணி நேரடியாக தகுதி பெற்ற வேளையில் குவாலிபயர் இரண்டாவது போட்டியில் சன் ரைசர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ளும்.

இந்நிலையில் இந்த தொடரின் போது ஹார்டிக் பாண்டியாவின் தலைமையில் வலுவான அணியாக களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியானது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 போட்டிகளில் 10 தோல்வியை சந்தித்தது. அதோடு மட்டுமின்றி இந்த தொடரில் கடைசி இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஹார்டிக் பாண்டியா கேப்டன் பதவி ஏற்றதில் இருந்து பெரிய அளவு விவாதம் சமூக வலைதளத்தில் அந்த அணியின் மீது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதேவேளையில் பாண்டியா தலைமையில் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட மும்பை அணி ஒன்றிணைந்து விளையாடாமல் இப்படி கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீதா அம்பானி இந்த தொடரில் தங்களது வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்று அவர்களிடம் வெளிப்படையாகவே கூறியுள்ளார். இருப்பினும் எதிர்காலத்தில் மிக பலமாக நமது அணி திரும்பும் என்றும் நம்பிக்கை தரும் வகையிலும் அவர் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்த தொடர் நமது அனைவருக்கும் ஏமாற்றமான ஒன்றுதான். நாம் விரும்பியபடி எதுவும் நடக்கவில்லை இருந்தாலும் நிச்சயம் நாம் தோல்வி குறித்து மீண்டும் சிந்தித்து வலுவாக திரும்பலாம். நான் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் மட்டும் அல்ல, எல்லோரையும் போல நானும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு தீவிர ரசிகை. மும்பை அணியின் ஜெர்சியை அணிவது மிகப்பெரிய கௌரவம்.

இதையும் படிங்க : ஆர்சிபி தோல்வி காயத்தில் உப்பை தடவிய ராயுடு.. சிஎஸ்கே வைத்து வெளியிட்ட பதிவால்.. ரசிகர்கள் கோபம்

இப்படி ஒரு அணியுடன் இருப்பது எனக்கு கிடைத்த பாக்கியம் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் ரோஹித் சர்மா, ஹார்டிக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், பும்ரா போன்றோர் டி20 உலக கோப்பை தொடரில் இடம் பெற்றுள்ளனர். நிச்சயம் கோப்பையுடன் நாடு திரும்ப வேண்டும் என்று அவர்களை வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement