என்னது நாங்க சொன்னோமா ? அப்படி நாங்க யோசிச்சி கூட பாக்கல – பி.சி.சி.ஐ க்கு அரை விட்ட நியூசி கிரிக்கெட் போர்டு

Ganguly
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 தொடர் நடைபெற்று வருகின்றன. இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக அளவிலும் இந்த தொடருக்கான ரசிகர்களின் வரவேற்பு அமோகமாக இருப்பதால் ஆண்டுதோறும் இந்த தொடர் நடைபெற்று வந்தது. இதுவரை 12 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 2020 ஆம் ஆண்டுக்கான பதிமூன்றாவது சீசன் கடந்த மார்ச் மாதம் இறுதியில் துவங்க இருந்தது.

CskvsMi

- Advertisement -

ஆனால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு காரணமாக இந்த தொடர் தற்போது வரை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடரை திட்டமிட்டபடி நடத்தாவிட்டால் பிசிசிஐக்கு சுமார் 4,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்பதால் இந்த தொடரை எவ்வாறாவது எப்படியாவது நடத்தியே தீரவேண்டும் என்ற முடிவுடன் பிசிசிஐ திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஆனால் ஐசிசி நடத்தும் டி20 உலககோப்பை மட்டும் இந்த தொடருக்கு தடையாக இருப்பதால் அந்த தொடர் ரத்து செய்யப்பட்டால் அந்த காலகட்டத்தில் இந்தியாவில் ஐ.பி.எல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆனால் அதுகுறித்து எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

IPL

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தங்களது நாட்டில் நடத்துமாறு ஏற்கனவே யூ.ஏ.இ மற்றும் இலங்கை ஆகிய கிரிக்கெட் நிர்வாகங்கள் ஏற்கனவே பி.சி.சி.ஐயிடம் வேண்டுகோள் வைத்திருந்தனர். அந்த வகையில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-யிடம் தங்களது நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்துக்கொள்ளுங்கள் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் நியூசிலாந்தில் தற்போது கொரோனா முற்றிலுமாக நீக்கப்பட்டு உள்நாட்டு போட்டிகள் நடைபெற ஆரம்பித்துவிட்டன. இதனைக் குறிப்பிட்ட அவர்களது கிரிக்கெட் நிர்வாகம் ஐ.பி.எல் தொடரை நடத்தி கொள்ளுமாறும் பிசிசிஐக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால் இது குறித்து பேசிய பிசிசி பொருளாளர் அருண் துமால் கூறுகையில் :

Ipl cup

ஐபிஎல் தொடரை நியூசிலாந்தில் நடத்துவது பற்றி பரிசீலிக்கவில்லை என்றும் இந்தியாவில் நடத்துவதற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் அதற்காகவே நாங்கள் பல நாட்கள் திட்டம் தீட்டி வருகிறோம் என்றும் கூறியுள்ளார். நியூசிலாந்தில் இத்தொடரை நடத்துவது குறித்து யோசிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் வெளியான இந்த தகவல் குறித்து பேசிய நியூஸி செய்தி தொடர்பாளர் கூறுகையில் : ‘‘நாங்கள் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்தோம் என்ற செய்தி யூகமானது. நாங்கள் அப்படி ஒரு விருப்பத்தை தெரிவிக்கவும் இல்லை. அப்படியான அணுகுமுறை எண்ணமும் இல்லை’’ என்று நியூசிலாந்து கிரிக்கெட் போர்டடின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement