- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இன்னும் ஒரு வாரம் இங்கயே இருங்க.. சூரியகுமார் யாதவ்க்கு கிரீன் சிக்னல் கொடுக்க மறுக்கும் – தேசிய கிரிக்கெட் அகாடெமி

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து டி20 வடிவ போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா ஓய்வை அறிவித்ததால் அவருக்கு பதிலாக புதிய டி20 கேப்டனாக சூரியகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டார். அப்படி கேப்டன் பொறுப்பை ஏற்ற சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியானது தொடர்ச்சியான வெற்றிகளை குவித்து அசத்தி வருகிறது.

இன்னும் ஒரு வாரம் சூரியகுமார் யாதவ் காத்திருக்க வேண்டும் :

இதன் காரணமாக அவரே 2026 டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக அந்த உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஆசிய கோப்பை தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி பங்கேற்க இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்காக தயாராக இருக்கும் இந்திய அணியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது உடற்தகுதியை நிரூபித்தால் தான் இந்த தொடரில் இடம்பிடிக்க முடியும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு அவர் ஹெர்னியா என்கிற உடலிறக்க பிரச்சனையால் பாதிக்கப்பட்டார்.

தற்போது அந்த பாதிப்பிற்கான அறுவை சிகிச்சையை முடித்துள்ள அவர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் வேளையில் ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி பயிற்சி மற்றும் சிகிச்சை பெற்று வருகிறார்.

- Advertisement -

ஏற்கனவே சில பயிற்சி அமர்வுகளில் கலந்து கொண்டிருந்தாலும் அவரது முழு உடற்தகுதியை உறுதிசெய்ய மேலும் ஒரு வாரம் தேசிய கிரிக்கெட் அகாடமில் தங்கி தனது முழு உடற்தகுதியை உறுதிசெய்ய வேண்டும் என தேசிய கிரிக்கெட் அகாடமி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : ஐபிஎல், பும்ராவை யாரும் நினைக்க மாட்டாங்க.. இந்திய வீரர்களை யாரும் மறக்க மாட்டாங்க.. வெங்சர்கார் பாராட்டு

இதன் காரணமாக இன்னும் ஒரு வாரம் அங்கு தங்க இருக்கும் சூரியகுமார் யாதவ் சோதனைகளை எல்லாம் முடித்துக் கொண்டு இந்திய அணியின் கேப்டனாக மீண்டும் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கான சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் பல்வேறு புதிய மாற்றங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -