ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்றுள்ள அதிக வயதுடைய வீரர். அந்த வீரர் யார் தெரியுமா ? – விவரம் இதோ

Doshi-1
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் வரும் 18-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் தங்களின் பெயரை பதிவு செய்யலாம் என முன்னர் பிசிசிஐ அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த வாரம், 1,097 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருப்பதாக முதல்கட்டப் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்போது இறுதிப் பட்டியலாக 292 பேர் ஏலத்துக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Doshi 2

- Advertisement -

இதில் மொத்தம் 292 வீரர்களில் இருந்து 22 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 61 வீரர்களை ஐபில் ஆடும் அணிகள ஏலத்தில் தேர்வு செய்யப்பட வேண்டும். இறுதிக் கட்டப் பட்டியலில் 164 இந்திய வீரர்களும் 125 வெளிநாட்டு வீரர்கள் மூன்று அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள். இதில் அதிக வயதுடைய வீரராக 42 வயதான நயன் தோஷி சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலீப் தோஷியின் மகன் ஆவார்.

இதுவரை 52 போட்டிகளில் விளையாடியுள்ள நயன் தோஷி 68 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஐபிஎல் தொடர் ஏலத்தில் இவருக்கு அடிப்படை தொகையாக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பிரவின் தாம்பே அதிக வயதானாலும் சிறிதும் வித்தியாசம் இன்றி ஒரு அளவிற்கு சிறப்பாக ஆடி இந்திய ரசிகர்களிடம் நல்ல அபிப்ராயத்தை வாங்கினார்.

doshi

அதே போன்று நயன் தோஷியும் சிறப்பாக விளையாடி எல்லோர் மனதிலும் இடம்பிடிப்பார் என்று நாம் எதிர்பார்க்கலாம். மேலும் இந்திய அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரர்களான புஜாரா மற்றும் விஹாரி ஆகியோரும் ஏலத்தில் தங்களது பெயரை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement