மசாஜ் செய்யும் பெண் ஊழியரை நியமித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – எதற்கு தெரியுமா ?

Rcb
- Advertisement -

இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முக்கிய அணியாக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் விளங்குகிறது. இருப்பினும் ஒரு முறை கூட இந்த அணி ஐபிஎல் தொடரை கைப்பற்றியது கிடையாது என்ற ஒரு மோசமான சாதனையை தன்வசம் வைத்துள்ளது.

- Advertisement -

கடந்த வருடமும் சிறப்பான வீரர்களை அணியில் கொண்டும் பெரிய அளவில் அவர்களால் சாதிக்க முடியவில்லை இதனால் அவ்வப்போது பெங்களூர் அணியில் சில மாற்றங்கள் செய்வார்கள் இம்முறை இந்த வருட ஐபில் தொடருக்காக புதிய பெண் துணை ஊழியரை ஆர்சிபி அணி நிர்ணயித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு துவங்க உள்ள 13வது ஐபிஎல் தொடரின் போர்ட்ஸ் மசாஜ் தெரபிஸ்ட்டாக நவ்நீதா கௌதம் என்பவர் ஆர்சிபி நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி நவ்நீதா கௌதம் பெங்களூரு அணி வீரர்கள் களைப்பில் இருக்கும்போதும், மனஉளைச்சலில் இருக்கும்போது அவர்களின் அழுத்தத்தை குறைக்க மசாஜ் செய்யும் வேலையை செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஐபிஎல் அணி ஒன்றில் பெண் ஊழியரை நியமித்த முதல் அணி என்ற பெருமையை பெங்களூரு அணி பெற்றுள்ளது. மேலும் இது குறித்த அறிவிப்பினை தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது

Advertisement