ரோஹித் சர்மா அவரை தப்பா யூஸ் பண்றாரு.. வெ.இ போறதுகுள்ள இந்திய அணி மாறனும்.. சித்து கோரிக்கை

Navjot Sidhu 2
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து ஜூன் ஒன்பதாம் தேதி நியூயார்க் நகரில் இந்தியா தங்களுடைய அடுத்த போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது. அந்த போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இதே தொடரில் கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவிடம் முதல் முறையாக தோற்ற பாகிஸ்தான் தற்சமயத்தில் தடுமாறி வருகிறது. முன்னதாக இந்தத் தொடரில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி துவக்க வீரராக களமிறங்கினார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் 741 ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை வென்றதால் அவரை கேப்டன் ரோகித் சர்மா ஓப்பனிங்கில் களமிறக்கியுள்ளார்.

- Advertisement -

சித்து கோரிக்கை:
இந்நிலையில் விராட் கோலியை அவருடைய இயற்கையான இடமான 3வது இடத்தில் கேப்டன் ரோகித் சர்மா பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விரைவில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறும் முதன்மையான சூப்பர் 8 சுற்றில் ரோஹித் – ஜெய்ஸ்வால் ஆகியோர் ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதற்கான காரணத்தைப் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “பொதுவாக ஓப்பனிங்கில் இடது – வலது கை பேட்ஸ்மேன் இருப்பது சிறந்த தேர்வாக இருக்கும். அந்த வகையில் என்னுடைய பார்வையில் ரோகித் சர்மா – ஜெய்ஸ்வால் ஆகியோர் துவக்க வீரர்களாகவும் விராட் கோலி 3வது இடத்திலும் வந்திருக்க வேண்டும். ஆனால் அணியின் பார்வையில் அவர்கள் தங்களுடைய ஜோடியை மாற்றியுள்ளனர்”

- Advertisement -

“ஏனெனில் சிவம் துபே, அக்சர் பட்டேல் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்காது. எனவே பவுலர்களுக்கு சாதகமாக இருக்கக்கூடிய பிட்ச்சில் 8வது இடத்தில் அக்சர் பட்டேல் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதால் அவர்கள் இந்த கலவையை உருவாக்கியுள்ளனர். ஒருவேளை இந்த தொடர் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் துவங்கியிருந்தால் ஜெயஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் துவக்க வீரர்களாக விளையாடியிருப்பார்கள்”

இதையும் படிங்க: 59 ரன்ஸ்.. சோக் செய்த தெ.ஆ.. பயத்தை காட்டிய நெதர்லாந்து.. ஹாட்ரிக் அவமானத்திலிருந்து காப்பாற்றிய மில்லர்

“ஏனெனில் அங்கே உங்களுக்கு 6 அல்லது 7வது பவுலர் தேவைப்படாது. இந்த கோணத்தில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அனுபவம் மிகுந்தவர்கள் என்பதால் முதல் 6 ஓவர்களில் விளையாடுவது அவசியம் என்று அணி நிர்வாகம் கருதுகிறது. ஏனென்றால் இங்குள்ள (அமெரிக்கா) மைதானங்களில் உங்களால் 200 ரன்கள் அடிக்க முடியாது. 130 – 140 ரன்கள் அடிப்பதே போதுமானது” என்று கூறினார்.

Advertisement