விராட் கோலிக்கும் இப்படி தான் ஆச்சு.. கண்ணை திறந்து பாருங்கய்யா.. அம்பயரை விளாசிய சித்து

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 7ஆம் தேதி நடைபெற்ற 56வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த டெல்லி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அபிஷேக் போரல் 65, பிரேசர்-மெக்குர்க் 50, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 41 ரன்கள் எடுத்த உதவியுடன் 222 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதைத் துரத்திய ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால், ரியான் பராக் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினார். அதனால் எதிர்புறம் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக 86 (46) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் ராஜஸ்தான் 201/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. முன்னதாக இந்தப் போட்டியில் முகேஷ் குமார் வீசிய 16வது ஓவரின் 4வது பந்தில் சாம்சன் சிக்ஸர் அடித்தார்.

- Advertisement -

சுமாரான அம்பயர்:
அதை பவுண்டரி எல்லையில் டெல்லி வீரர் ஷாய் ஹோப் பிடித்தார். அப்போது அவருடைய கால் பவுண்டரி எல்லையில் தொட்டது போல் தெரிந்ததால் சஞ்சு சாம்சன் சந்தேகத்துடன் நடுவரிடம் வாதிட்டார். ஆனால் அதை 3வது நடுவர் அறையும் குறையுமாக ஒரு நிமிடத்திற்குள் சோதித்து விட்டு மீண்டும் அவுட் என்று அறிவித்தது சாம்சனை ஏமாற்றமடைய வைத்தது.

ஆனால் பவுண்டரி எல்லையில் கால் பட்டது நன்றாக தெரிந்தும் 3வது நடுவர் சரியாக வேலை செய்யாமல் அவுட் கொடுத்ததாக ராஜஸ்தான் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சஞ்சு சாம்சன் அவுட்டில்லை என்று விமர்சிக்கும் முன்னாள் இந்திய வீரர் நவ்ஜோத் சித்து ஏற்கனவே கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலிக்கு இதே போல நோ-பாலில் அவுட் கொடுக்கப்பட்டதாக அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். கடைசியில் அதுவே ராஜஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக அவர் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வெற்றியை மாற்றியது. அது சம்பந்தமாக பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் நீங்கள் பக்கவாட்டு கோணத்தில் பார்க்கும் போது கால் 2 முறை பவுண்டரி எல்லையை தொட்டது தெளிவாக தெரியும். ஒன்று நீங்கள் டெக்னாலஜியை பயன்படுத்தாதீர்கள். அல்லது டெக்னாலஜியை பயன்படுத்தினால் இது போன்ற தவறை செய்யாதீர்கள்”

இதையும் படிங்க: “இந்தமுறையும் கப் நம்மகிட்ட தான் இருக்கனும்” உருக்கமான பதிவை பகிர்ந்து – சி.எஸ்.கே அணியில் இருந்து வெளியேறிய பதிரானா

“2 முறை பவுண்டரி எல்லையில் கால் பட்டது. அதன் பின்பும் “நான் நடுநிலையான நபர் எனவே அது அவுட்” என்று சிலர் சொல்லக்கூடும். அதனாலயே நான் எப்போதும் விராட் கோலியின் அவுட்டையும் பேசி வருகிறேன். அதாவது விதிமுறை எதுவாக இருந்தாலும் நீங்கள் முதலில் கண்களால் நன்றாக பார்க்க வேண்டும். அங்கே நம்ப முடியாத சில வலுவான ஆதாரங்கள் கிடைக்கும். நடுவர்கள் இதை வேண்டுமென்று செய்திருக்க மாட்டார்கள். ஆனால் அதுவே போட்டியை மாற்றியது” என்று கூறினார்.

Advertisement