ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்த தொடரின் 4வது போட்டியில் 184 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 2 – 1* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது.
அது போக 2014க்குப்பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்லும் வாய்ப்பையும் இந்தியா இழந்துள்ளது. முன்னதாக மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 340 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து ரிஷப் பண்ட் நங்கூரமாக விளையாடினார். குறிப்பாக முதல் இன்னிங்சில் விக்கெட்டை பரிசளித்ததால் இம்முறை 104 பந்துகள் எதிர்கொண்ட அவர் 30 ரன்கள் எடுத்து அசத்தினார்.
அவமதித்த ஹெட்:
ஆனால் அப்போது டிராவிஸ் ஹெட் வீசிய பதில் தேவையின்றி இறங்கி சென்று அடித்த அவர் தன்னுடைய விக்கெட்டை மீண்டும் பரிசளித்தது இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டது. மறுபுறம் அவருடைய விக்கெட்டை டிராவிஸ் ஹெட் தன்னுடைய கைகளால் வித்தியாசமான செய்கையை செய்து கொண்டாடினார். அது இந்திய அணியை இழிவு படுத்துவது போல் இரட்டை அர்த்தத்தில் இருந்ததாக ரசிகர்கள் விமர்சித்தனர்.
இருப்பினும் பந்து வீசியதால் சூடாக இருக்கும் தன்னுடைய விரலை ஐஸ் குடுவையில் நனைத்து ஆற்றுவது போன்ற அர்த்தத்தில் தான் டிராவிஸ் ஹெட் அவ்வாறு கொண்டாடியதாக போட்டியின் முடிவில் ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் கூறினார். இந்நிலையில் 1.5 பில்லியன் இந்திய மக்களை அவமானப்படுத்தும் வகையில் டிராவிஸ் ஹெட் அவ்வாறு கொண்டாடியதாக முன்னாள் வீரர் நவ்ஜோக் சித்து விமர்சித்துள்ளார்.
தண்டனை கொடுங்க:
இது பற்றி அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “மெல்போர்ன் மைதானத்தில் டிராவிஸ் ஹெட் அருவருப்பான நடத்தை ஜென்டில்மேன் விளையாட்டிற்கு நன்றாக தெரியவில்லை. விளையாட்டை பார்க்கும் பெண்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் இருக்கும் போது அது மோசமான உதாரணம். இந்த காரசாரமான நடத்தை ஒரு தனி நபரை அவமதிக்கவில்லை”
இதையும் படிங்க: மொத்தம் 1427 ரன்ஸ்.. மாறிமாறி அடி.. ஆப்கானிஸ்தான் – ஜிம்பாப்வே 2 அணிகளும் சாதனை.. ஜிம்பாப்வே வீரர் உலக சாதனை
“ஆனால் 1.5 பில்லியன் மக்கள் இந்தியர்களைக் கொண்ட ஒரு தேசத்தை அவமதித்துள்ளீர்கள். எதிர்கால சந்ததியினருக்கு தடையாக இருக்கும் கடுமையான தண்டனை அவர் மீது அறையப்பட வேண்டும். அதனால் யாரும் அதை மீண்டும் செய்யத் துணிய மாட்டார்கள்” என்று கூறினார். மொத்தத்தில் இத்தொடரை சமன் செய்ய குறைந்தபட்சம் கடைசி போட்டியை எதிராக வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.



