- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இவருக்கு மட்டும் உங்களால ஃபீல்டிங் வைக்கவே முடியாது.. இந்திய வீரருக்கு நவ்ஜோத் சித்து பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணி 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இம்முறை 2007க்குப்பின் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையில் விளையாடும் இந்தியா முதல் போட்டியில் அயர்லாந்தை எளிதாக வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் 119 ரன்களை கட்டுப்படுத்திய இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் மறக்க முடியாத வெற்றி பெற்றது.

அதன் பின் அமெரிக்காவுக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. நியூயார்க் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் பேட்டிங்க்கு சவாலான பிட்ச்சில் 111 ரன்கள் துரத்திய இந்தியாவுக்கு ரோகித் சர்மா 3 விராட் கோலி 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதே போல ரிஷப் பண்ட்டும் 18 ரன்களில் அவுட்டானதால் இந்தியா தடுமாறியது.

- Advertisement -

சித்து பாராட்டு:
அப்போது ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ் 50* ரன்களும் சிவம் துபே 31* ரன்களும் அடித்து இந்தியாவை 18.2 ஓவரில் வெற்றி பெற வைத்தனர். முதலிரண்டு போட்டிகளில் ஏமாற்றத்தை கொடுத்த சூரியகுமார் யாதவ் அப்போட்டியில் மிகவும் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்து வெற்றி பெற வைத்தார். பொதுவாகவே களமிறங்கிய முதல் பந்திலிருந்தே மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடிக்கக்கூடிய அவர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று பாராட்டப்படுகிறார்.

இந்நிலையில் எதிரணியால் எளிதாக ஃபீல்டிங் வைக்க முடியாத அளவுக்கு சூரியகுமார் யாதவ் 360 டிகிரியிலும் அடிப்பதாக முன்னாள் இந்திய வீரர் நவ்ஜோத் சித்து பாராட்டியுள்ளார். ஏனெனில் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் மைதானத்திற்கு நேராக அடிக்கக்கூடிய நிலையில் சூரியகுமார் மட்டும் விக்கெட் கீப்பருக்கு பின் திசையில் அதிகமாக அடிப்பதாக அவர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அமெரிக்காவுக்கு எதிரான இன்னிங்ஸில் அவருடைய 40% ரன்கள் ஃபைன் லெக் ஏரியாவில் வந்தது. அவர் மைதானத்தின் வி திசைக்கு எதிர்ப்புறமாக பின் திசையில் அடிகிறார். அவர் 360 டிகிரியில் அட்டாக் செய்கிறார். எனவே அவருக்கு எதிராக உங்களால் ஃபீல்டிங்கை செட்டிங் செய்ய முடியாது”

இதையும் படிங்க: 4 ஓவர்ஸ் 4 மெய்டன் 0 ரன்ஸ்.. யாராலும் உடைக்க முடியாத 2 உலக சாதனை படைத்த பெர்குசன்.. ரசிகர்கள் ஆச்சர்யம்

“அவ்வாறு செய்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அந்தப் போட்டியில் விளையாடிய வேகத்திற்கு அவர் 50 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால் போட்டியை வென்று கொடுத்திருப்பார். சில வீரர்கள் மட்டுமே அந்த வேகத்தில் விளையாட முடியும். ஒருவேளை ஹர்திக் பாண்டியா, டிராவிஸ் ஹெட் அதுவும் புதிய பந்தில் அடித்திருக்க கூடும்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இந்தியா தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை ஜூன் 20ஆம் தேதி சந்திக்கிறது.

- Advertisement -