இந்த ஆண்டு ஐ.பி.எல் மட்டும் நடக்கலைனா ரொம்ப ஏமாந்துடுவேன். கனவே வேஸ்ட் ஆகிடும் – புலம்பும் பெங்களூரு வீரர்

Rcb
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த மாபெரும் கிரிக்கெட் தொடர் தற்போது 13 சீசனாக மார்ச் மாதம் 29ஆம் தேதி துவங்க இருந்தது.

Ipl cup

ஆனால் உலகெங்கிலும் பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் நடைபெற இருந்த இந்த ஐபிஎல் தொடர் மார்ச் 29ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த இந்திய அரசாங்கம் ஏப்ரல் 15ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவை நீடிக்க வாய்ப்பில்லை என்றே தகவல்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் அவ்வாறு 15ம் தேதி நிலைமையை சரி ஆனால் அதன் பின்னர் ஐபிஎல் தொடர் ரத்து செய்வதா அல்லது தொடங்குவதா என்பது குறித்த செய்திகள் வெளியாகும்.

Saini 1

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் இளம் வீரரும், வளர்ந்துவரும் வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி ஐபிஎல் குறித்து தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது : இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக பல இளம் வீரர்கள் கனவுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவது மூலம் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு அவர்களுக்கு நல்ல வாய்ப்பு இருந்தாலும் தற்போது உள்ள சூழ்நிலையில் மக்களின் நலம் மிகவும் அவசியம் .கிரிக்கெட் வீரர்கள் என்பதையும் தாண்டி நாம் மனிதர்கள் எனவே நம்முடைய உயிரை பாதுகாக்க வேண்டிய கடமை நம்மிடம் உள்ளது.

saini

தற்போது உள்ள சூழலில் இந்த வருட ஐபிஎல் தொடரை விட்டாலும் அது பெரியதாக தெரியாது. இருந்தாலும் மிகப்பெரிய தொடரான இந்த ஐபிஎல் தொடரை நாம் இந்த ஆண்டு இழந்தால் அது மிகப் பெரிய ஏமாற்றமாக இருக்கும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement