கேரியர் முடிஞ்சுன்னு லண்டன் போன எனக்கு அதிர்ஷ்டமா வெ.இ சான்ஸ் கிடைக்கும்னு எதிர்பாக்கல – இந்திய வீரர் மகிழ்ச்சி பேட்டி

Navdeep Saini India Rahane
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வரும் ஜூலை மாதம் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோற்றதால் அதிரடியான மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டு ரகானே துணை கேப்டனாக முன்னேறியுள்ளார். மேலும் சொதப்பல் பேட்டிங்கின் மொத்த பழியையும் புஜாரா மீது போட்டு கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு ரஞ்சி கோப்பையில் அசத்தும் சர்ப்ராஸ் கானை மீண்டும் புறக்கணித்து ஜெய்ஸ்வால், ஜெய்ஸ்வால் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Saini 1

- Advertisement -

அதே போல் வேகப்பந்து வீச்சு துறையில் உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் கழற்றி விடப்பட்ட நிலையில் முகேஷ் குமார் மற்றும் நவ்தீப் ஷைனி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இதில் முகேஷ் குமார் உள்ளூர் போட்டிகளில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி தேர்வாகியுள்ள நிலையில் நவ்தீப் சைனி கம்பேக் கொடுத்துள்ளது நிறைய ரசிகர்களுக்கு ஆச்சரியமாகும். ஏனெனில் ஹரியானாவைச் சேர்ந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதால் கடந்த 2019ஆம் ஆண்டு இதே வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அறிமுகமானார்.

லக்கா மாட்டிக்கிச்சு:
ஆனால் 8 ஒருநாள், 11 டி20 போட்டிகளுக்கு மேல் இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாத அவர் 2021ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி 2 போட்டியுடன் சுமாராக செயல்பட்டு வெளியேறினார். அதை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் சுமாராக செயல்பட்ட நிலையில் கடந்த 2022இல் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி தொடரிலும் கென்ட் அணிக்காக 7 விக்கெட்டுகளை மட்டும் எடுத்து எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. அதனால் வேறு வீரர்களின் நோக்கி இந்திய அணி திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 30 வயதாகும் அவரை மீண்டும் தேர்வுக்குழு தேர்ந்தெடுத்துள்ளது.

saini 1

இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நெட் பவுலராக இருந்த வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்து மீண்டும் கவுண்டி தொடரில் விளையாடுவதற்காக லண்டனில் சென்று கால் வைத்ததும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடு வாய்ப்பு கிடைத்ததை எதிர்பார்க்கவில்லை என நவ்தீப் சைனி மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் இதை எதிர்பார்க்கவில்லை. ஆம் ஐபிஎல் தொடரின் போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நெட் பவுலராக அல்லது ரிசர்வ் வீரராக தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கையுடன் டுக் பந்துகளை நான் பயிற்சிகளை செய்தேன்”

- Advertisement -

“அதே போலவே கவுண்டி தொடரில் விளையாடுவதற்காக மீண்டும் நான் லண்டனுக்கு இன்று தான் வந்து இறங்கினேன். மேலும் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த போது தான் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட செய்தியை அறிந்தேன். எனவே இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நான் குறைந்தது ஒரு போட்டியில் விளையாடுவேன் என்று நம்புகிறேன். அந்தத் தொடருக்கு முன்பாக கவுண்டி தொடரில் விளையாடுவது நல்ல பயிற்சியாக இருக்கும். இது வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு நான் செல்லும் 2வது சுற்றுப்பயணமாகும்”

Saini

“கடந்த பயணத்தில் எனக்கு விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இம்முறை கிடைக்கும் என்று நம்புகிறேன். மேலும் அங்குள்ள கால சூழ்நிலையில் எப்படி இருக்கும் என்பதை நான் அறிவேன். குறிப்பாக இந்தியாவில் இருப்பதைப் போலவே அங்குள்ள பிட்ச்கள் சற்று கீழாகவும் மெதுவாகவும் இருக்கும். பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் காயங்களை பார்க்காமல் இருக்க முடியாது”

இதையும் படிங்க:IND vs WI : இந்த விஷயத்தை நான் சொன்னதும் எங்கப்பா அழுத்துட்டாரு – இந்திய இளம்வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி

“அதனால் இடையிடையே சில காயங்கள் சந்தித்தது எனக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இருப்பினும் அது நமது கையில் இல்லை என்பதால் தொடர்ந்து நாம் முன்னேறுவதில் கவனம் செலுத்த வேண்டும். அதை விட முதன்மை அணியில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் எப்போதும் நான் நெட் பவுலராக இந்திய அணியுடன் இருப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். அந்த வகையில் அணி நிர்வாகம் என்னை நம்புவதால் நிச்சயம் எப்போதாவது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன்” என கூறினார்.

Advertisement