ரவி சாஸ்திரி கொடுத்த டிப்ஸ்களை பயன்படுத்தும் நட்டு – நேற்றைய போட்டியில் இதை கவனித்தீர்களா ?

Nattu-2

நேற்றைய ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 149 ரன்கள் அடித்தது. அதன் பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 143 ரன்கள் மட்டும் தான் எடுக்க முடிந்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

siraj

நேற்றைய போட்டியில் தங்கராசு நடராஜன் வெறும் யாக்கர் மட்டுமின்றி பல வேரியேஷன் பந்துகளை போட்டு அனைவரையும் அசத்தினார். இந்திய அணிக்கு நடராஜன் ஆடும் வேளையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நடராஜனிடம் யார்க்கர் மட்டும் போட வேண்டாம். பவுலிங்கில் சில பல வேரியேஷன் நிச்சயமாக நீ காட்ட வேண்டும் என்று அறிவுரை கூறியதாக முன்னர் செய்தி வந்தது. அதை கருத்தில் கொண்ட நடராஜன் நேற்றைய போட்டியில் பல வெரைட்டியான பந்துகளை வீசி அசத்தினார்.

நேற்றைய போட்டியில் முதல் ஓவரில் ஒரே ஒரு யர்க்கர் மட்டுமே வீசினார். அடுத்த 5 பந்துகளை மிகவும் மாறுபட்ட பந்துகளாக தெரிந்தது. ஸ்லோ பால், ஷார்ட் பால், கட்டர் மற்றும் பவுன்சர் என பவுலிங்கில் வேரியேஷன் காட்டி அசத்தினார். அதனைப்போலவே 12-வது ஓவரில் தன்னுடைய இரண்டாவது ஓவரை வீசிய நடராஜன், ஒரு யார்க்கர் கூட வீசவில்லை.

nattu

அவர் வீசிய அனைத்து பந்துகளும் மாறுபட்ட பந்துகளாக இருந்தது. மேலும் அந்த ஓவரில் பெங்களூர் பேட்ஸ்மேன்கள் வெறும் 6 ரன்கள் மட்டும் தான் எடுக்க முடிந்தது. அதே போலவே தன்னுடைய மூன்றாவது ஓவரில் 4 ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

- Advertisement -

nattu 1

வெறும் யார்க்கர் மட்டுமே போட்டு வந்தால் நிச்சயமாக நடராஜன் இறுதிவரை நிலைக்க மாட்டார். நேற்றைய போட்டியில் அவர் வீசிய பந்துகள் மிக அற்புதமாக இருந்தது. இப்படி அவரே தன்னை புதுப்பித்துக் கொள்ளும் பட்சத்தில், நிச்சயமாக அவருடைய கேரியர் நீண்டு கொண்டு செல்லும். எனவே நடராஜன் இது போல தன்னை ஒவ்வொரு நாளும் புதுப்பித்து கொண்டே வரவேண்டும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் மற்றும் வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.