தோனி கொடுத்த இந்த அறிவுரைகள் எனக்கு ரொம்ப ஹெல்ப்பா இருக்கு – நடராஜன் பகிர்வு

Nattu

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி நடராஜன் உலகின் முன்னணி வீரர்களான தோனி, டிவில்லியர்ஸ், ரசல் என முன்னணி வீரர்களை தனது பந்து வீச்சின் மூலம் விக்கெட்டை வீழ்த்தி அனைவரது மத்தியிலும் வரவேற்பினை பெற்று அதன் பிறகு ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இடம் பிடித்த அவர் மூன்று வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இடம் பிடித்து அசத்தினார்.

nattu

அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார். இந்நிலையில் கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு தோனியுடன் நடைபெற்ற உரையாடல் குறித்து மனம் திறந்துள்ளார் நடராஜன். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ஆட்டத்திற்கு பிறகு தோனியிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மாதிரியான ஆளுமைகளுடன் பேசுவதே பெரிய விஷயம். அவர் எனது ஃபிட்னஸ் குறித்து நிறைய பேசியிருந்தார், எனக்கு ஊக்கம் கொடுத்தார். விளையாடுவதன் மூலம் கிடைக்கின்ற அனுபவங்கள்தான் நம்மை மேம்படுத்தும் என்று கூறினார். பந்து வீசும்போது பவுன்சர், கட்டர் என பேட்ஸ்மேன்கள் நினைக்காத நேரத்தில் பந்துவீச்சில் வேரியேஷன்களை கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறினார்.

nattu 1

அவர் கூறிய இந்த அறிவுரை எனக்கு நிறைய உதவி புரிகிறது. நான் என்னுடைய பலமான யார்க்கரை வீசுவதை முதன்மையாக வைத்து இருந்தாலும் அவ்வப்போது சிலர் ஸ்லோ பவுன்சர்கள், கட்டர்கள் வீசி வருகிறேன். தோனியின் விக்கெட் வீழ்த்திய அந்த தருணம் குறித்து பேசிய நடராஜன் : அந்த போட்டியில் நான் அவரது விக்கெட்டை வீழ்த்துவதற்கு முன்னர் 102 மீட்டர் என்ற இமாலய சிக்சர் விளாசினார்.

- Advertisement -

Nattu

அதற்கு அடுத்த பந்திலேயே அவரது விக்கெட்டை நான் வீழ்த்தினேன். அப்போது அதனை நான் பெரிதாக கொண்டாடவில்லை ஏனெனில் அதற்கு முந்தைய பந்தில் சென்ற சிக்ஸரை பற்றிதான் யோசித்துக்கொண்டிருந்தேன். ஓய்வு அறைக்கு வந்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. அதே போல் ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடும் போது டிவில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதை என்னால் மறக்க முடியாது என நடராஜன் கூறியுள்ளார்.