- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் நட்டு. இந்திய ஜெர்சியுடன் கொடுத்த போஸ் – வைரலாகும் புகைப்படம்

அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைஸ் அணிக்காக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். மேலும் துல்லியமாக யார்க்கர் வீசும் திறமையின் மூலம் இவர் சர்வதேச அளவில் தற்போது புகழ் பெற்றுள்ளார்.

அதுமட்டுமின்றி பிசிசிஐ-யின் தேர்வாளர்கள் கண்களிலும் பட்ட நடராஜன் தற்போது இந்திய அணிக்கு விளையாட தேர்வாகியுள்ளார். இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை என்று ஐபிஎல் தொடருக்கு முன்னர் கூறிய நடராஜன் தற்போது இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவில் உள்ளார். டி20 அணியில் இடம் பிடித்திருக்கும் அவர் நிச்சயம் 3 போட்டிகளில் ஒரு போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் இந்த சுற்றுப்பயணத்தில் தேர்வான அவருக்கு அனுபவ வீரர்கள் மற்றும் பிரபல வீரர்கள் ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வர தற்போது தனது கனவு நினைவான தருணத்தில் நடராஜன் உள்ளார். ஆம் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசையில் இருந்த அவர் நான்காம் எண் கொண்ட தனது ஜெர்சியை அணிந்தபடி புகைப்படம் ஒன்றினை எடுத்துள்ளார்.

மேலும் இந்திய அணி 1992ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அணிந்திருந்த “விண்டேஜ் ரெட்ரோ ஜெர்சியை” அணிந்தபடி போஸ் கொடுத்துள்ள நடராஜன் அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தைப் பார்த்து வாழ்த்துக்களையும், தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by