ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய தமிழக வீரர் யார்க்கர் கிங் நட்டு – அவருக்கு இப்படி ஒரு சோதனையா ?

Nattu
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடித்தவர் தமிழக வீரர் நடராஜன். தொடர்ச்சியான யார்க்கர் வீசும் திறனால் ரசிகர்கள் மத்தியில் “யார்க்கர் கிங்” என்று அழைக்கப்படும் நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதனை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் நடராஜன் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில் இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை அணியில் முக்கிய பந்துவீச்சாளராக இருப்பார் என்றும் உறுதியளித்தார்.

Nattu-2

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகடமியில் சிகிச்சை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் விளையாடிய நடராஜன் அதன்பிறகு தற்போது இந்த ஐபிஎல் தொடரை முக்கியமான தொடராக எதிர்பார்த்திருந்தார்.

ஏனெனில் இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கும் வேளையில் இந்த தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்கும் வாய்ப்பை அவர் எதிர்பார்த்திருந்தார். தற்போது எதிர்பாராதவிதமாக அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முழங்கால் பிரச்சினை காரணமாக அவர் அவதிப்பட்டு வருவதால் அவருக்கு சிகிச்சை அவசியம் என்பதால் தற்போது ஹைதராபாத் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அவருக்கு ஸ்கேன் மற்றும் சிகிச்சை எடுக்கும் பட்சத்தில் பயோ பபுளை விட்டு வெளியேறினால் 7 நாட்களுக்கு பிறகு தான் அணியில் இணைய முடியும் என்று ஏற்கனவே டேவிட் வார்னர் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அவரின் முழங்கால் காயம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவருக்கு நிச்சயம் சிகிச்சை தேவை என்றும் அதனால் அவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். மீண்டும் தேசிய அகடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ளவுள்ளார்.

nattu

இதன் காரணமாக நடராஜன் இந்த தொடர் முழுவதுமே விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர். மேலும் எப்படியாவது இந்த காயத்தில் இருந்து வெளியேறி அவர் நிச்சயம் டி20 இந்திய அணியில் இடம்பிடித்து உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement