ஐ.பி.எல் மட்டுமல்ல இந்திய அணியின் முக்கிய தொடருக்கும் நடராஜனின் பெயர் பரிசீலக்கப்படும் – ரசிகர்கள் மகிழ்ச்சி

Nattu-2

சேலம் சின்னப்பம்பட்டி சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன் தற்போது ஐ.பி.எல் தொடரில் சர்வதேச வீரர்களுக்கு இடையே ஜொலித்து வருகிறார். தனது மிகச்சிறப்பான வேகப்பந்து வீச்சில் திறமை மூலம் உலகில் பல வேகப்பந்து வீச்சு ஜாம்பவான்கள் மூலம் புகழப்பட்டு வருகிறார். குறிப்பாக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பல இளைஞர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

nattu

அதிலும் தமிழக வீரர்கள் தங்கராசு நடராஜன், வாசிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, முருகன் அஸ்வின் போன்ற பல வீரர்களும் தங்களது திறமையை அபாரமாக வெளிப்படுத்தி சர்வதேச வீரர்களை வீழ்த்தி வருகின்றனர். குறிப்பாக நடராஜன் இந்திய அணிக்குள் வருவதற்கும் வாய்ப்பு வந்துகொண்டிருக்கிறது.

ஏனெனில் தற்போது புவனேஸ்வர் குமார் மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரர்களாக இருக்கின்றனர். இவர்கள் இருவரும் நடப்பு ஐ.பி.எல் தொடரில் காயமடைந்து தொடரின் பாதியிலேயே வெளியேறிவிட்டனர். இந்நிலையில ஆஸ்திரேலியாவில் வரும் டிசம்பர் மாதம் டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது.

Bhuvi 1

இதற்காக இந்த இரண்டு வீரர்களும் தயாராக விட்டால் கண்டிப்பாக அடுத்து இருக்கும் நவ்தீப் சைனி, கலீல் அஹமது, தங்கராசு நடராஜன் ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே நவதீப் சைனி சர்வதேச அளவில் நன்றாக பந்து வீசி இருக்கிறார்.

- Advertisement -

கலீல் அஹமது இதற்கு முன்னர் தேர்வாகி நன்றாக வீசவில்லை. இதன் காரணமாக கண்டிப்பாக நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை அப்படி ஆகிவிட்டால் சர்வதேச அளவில் சேலம் சின்னப்பம்பட்டி இளைஞன் ஜொலிப்பார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.