சர்வதேச தலைகளை தட்டி சாதித்து வரும் சேலத்து புயல். நடராஜனின் முன்னேற்றம் – அடுத்த ஜாஹீர் கான் – விவரம் இதோ

Nattu-2
- Advertisement -

தமிழகத்தின் உள்ளூர் வீரர்களின் பல ஆண்டுகால கனவு கடந்த சில ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறி வருகிறது. முதலில் முருகன் அஸ்வின், வருன் சக்கரவர்த்தி போன்ற வீரர்கள் தமிழ்நாடு பிரீமியர் லீக் மூலம் ஐபிஎல் தொடரில் தேர்வானவர்கள். அதன் பின்னர் அந்த இடத்தை மிகப்பெரிய இடமாக மாற்றி விட்டார் சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த தங்கராசு நடராஜன். சின்னப்பம்பட்டி தீப்பொறி என்று தான் இவரை அழைக்கின்றனர்.

Nattu

- Advertisement -

ஏனெனில் நம்ம ஊர் பையன் நடராஜன் என்று சொல்லும் அளவிற்கு இவர் தமிழக கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர் வாசனை கொண்ட வீரராவார். தமிழகத்தில் இருந்து தற்போது வரை ஆடிய பல வீரர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்த வீரர்களாகவும் பெரும் நகரத்தைச் சேர்ந்த வீரர்களாகவும் இருந்து வருகின்றனர். ஆனால் தற்போதுதான் நடராஜனை போன்ற குக்கிராமத்தில் இருக்கும் வீரர்கள் வர துவங்கி உள்ளனர்.

ஐபிஎல் தொடரில் தற்போது வரை 16 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கும் நடராஜன். இந்த வருட ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என்று ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் பாராட்டியிருக்கிறார்.நடராஜன் அடித்து தூக்கிய விக்கெட்டுகள் எல்லாம் பெரிய பெரிய தலைகள். மகேந்திர சிங், தோனி, ஏபி டிவில்லியர்ஸ், விராட் கோலி என இவர் விந்திய பெரிய தலைகளின் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.

nattu 1

நீங்கள் யாராக இருந்தாலும் சரி நான் உங்களுக்கு யார்க்கர் வீசுவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் சின்னப்பம்பட்டி தீப்பொறி. மேலும் இந்திய அணி தேடிக் கொண்டிருக்கும்போது வீரராகவும் அமைந்துவிட்டார் நடராஜன்.

- Advertisement -

ஜாகிர்கானுக்கு பிறகு இந்தியாவில் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் இல்லை என்று கூறப்பட்டு வந்தது இதற்காக கலீல் அஹமது, ஜாதேவ் உனத்தக்கட் என பல வீரர்களை வைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், நடராஜன் போன்று யாராலும் யார்க்கர் வீச முடியவில்லை என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பெரும் கவலை. அந்த இடத்தை நிரப்ப வந்துவிட்டார் நடராஜன்.

ஆஸ்திரேலிய தொடருக்கு இந்திய நேரடி அணியில் இடம் பெறாவிட்டாலும் கூடுதல் பந்துவீச்சு பயிற்சியாளராக அழைத்துச் செல்லப்பட உள்ளார். அங்கு கண்டிப்பாக யாருக்காவது காயம் ஏற்பட்டால் உடனடியாக நடராஜன் களமிறக்கப்படுவார் என்பது உறுதி. நடராஜன் வீசும் யார்க்கர் பந்துகளுக்காக ஆஸ்திரேலியாவின் ஸ்டம்புகள் பறக்க காத்துக்கொண்டிருக்கின்றன என்பதே சிறப்பு.

Advertisement