டி20 இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்த நட்டு – முக்கிய தலைகளின் பார்வையை திருப்பி அசத்தல்

Nattu

நடப்பு ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தமிழக வீரர் நடராஜன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதுமட்டுமின்றி பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர்களின் பார்வையும் அவர் மீது பட்டது. தேர்வுக்குழுவினரும் தொடர்ந்து யார்க்கர் வீசும் அவரது திறனை பார்த்து அவரை ஆஸ்திரேலியா செல்லும் சுற்றுப்பயணத்தில் கூடுதல் பந்துவீச்சாளராக முதலில் இடம் அளித்தனர்.

Nattu 1

ஆனால் அதே நேரத்தில் டி20 அணியில் இடம்பெற்றிருந்த வருண் சக்கரத்திற்கு காயம் ஏற்படவே அந்த அதிர்ஷ்டத்தின் மூலம் தற்போது நடராஜன் டி20 அணியின் வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி தற்போது ஆஸ்திரேலியா சென்றடைந்த அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவரும் டி20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கும் ஆடும் லெவனிலும் தற்போது இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் நடராஜனையும் சேர்த்து டி20 தொடரில் இந்திய அணிக்காக ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் நிச்சயம் டி20 போட்டிகளில் விளையாடுவார்கள். அவரைத் தவிர்த்து மூன்றாவது இடத்திற்கான போட்டியில் சைனி தீபக் சஹர் ஆகியோருடன் நடராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் நிச்சயம் இந்த மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் ஆவது அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Nattu-2

ஏனெனில் தற்போது வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணியில் நடராஜன் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருகிறார் என்பதும் அதனை தாண்டி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் அணியின் கேப்டன் கோலியின் முன்னணியில் அவர் பந்து வீசி வருகிறார். இந்த வீடியோவை பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டு உள்ளது.

- Advertisement -

அதனால் கோலிமற்றும் ரவி சாஸ்திரி ஆகியோரின் பார்வையை பெற்றுள்ள நட்ராஜன் நிச்சயம் டி20 தொடரில் ஒரு போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. மேலும் பும்ரா, ஷமி ஆகியோர் இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அதனால் ஒரு போட்டியிலாவது சோதனை அடிப்படையில் நடராஜன் நிச்சயம் விளையாடுவார் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.