புஜாரா, ரஹானே இல்லாத குறையை அந்த 3 பேட்ஸ்மேன்கள் பாத்துப்பாங்க.. சவாலுக்கு தயார்.. நேதன் லயன்

Nathan Lyon
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா தங்களது சொந்த மண்ணில் விளையாடும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. பொதுவாகவே சொந்த மண்ணில் வலுவான அணியான ஆஸ்திரேலியா கடைசியாக இந்தியாவுக்கு எதிராக விளையாடிய 2 தொடர்களிலும் அடுத்தடுத்து தோற்றது. அதனால் இம்முறை எப்படியாவது இந்தியாவை வீழ்த்துவதற்காக ஆஸ்திரேலிய அணி தயாராகி வருகிறது.

மறுபுறம் சவாலான ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்த தொடர்களை வென்ற முதல் ஆசிய அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது. எனவே இம்முறையும் வென்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் இந்தியாவும் தயாராகி வருகிறது. இருப்பினும் இம்முறை புஜாரா, ரஹானே ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்பது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ரஹானே, புஜாரா:

ஏனெனில் 2018 – 19 தொடரில் அதிக ரன்கள் குவித்த புஜாரா ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக தொடரை வென்று இந்தியா சாதனை படைக்க தொடர்நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார். அதே போல 2020 – 21 தொடரில் அதிக பந்துகளை எதிர்கொண்ட புஜாரா மீண்டும் இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். மறுபுறம் 2020 – 21 தொடரில் 36க்கு ஆல் அவுட்டான இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது.

அப்போது கேப்டனாக பொறுப்பேற்ற ரகானே இந்திய அணியை அபாரமாக வழி நடத்தி 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலியாவில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இருப்பினும் அதன் பின் சிறப்பாக விளையாடத் தவறியதால் அவர்களை பிசிசிஐ தற்போது கழற்றி விட்டுள்ளது. இந்நிலையில் ரஹானே, புஜாரா ஆகியோரது இடத்தை ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் நிரப்புவார்கள் என்று ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

3 பேட்ஸ்மேன்கள்:

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர்களிடம் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகிய 3 பெரிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அது போக ஜெய்ஸ்வால், கில், ஜடேஜா ஆகியோரும் உள்ளனர். 5வது இடத்தில் யார் விளையாடுவார்கள் என்பது ஆச்சரியமாகும்”

இதையும் படிங்க: என்னையா டீம்ல சேக்க மாட்ரீங்க.. இங்கிலாந்து சென்று சம்பவம் செய்த யுஸ்வேந்திர சாஹல் – என்ன நடந்தது?

“இந்திய அணியில் சிறப்பான பேட்டிங் வரிசை இருக்கிறது. எனவே அது எங்களுக்கு பெரிய சவாலாக இருக்கும். இருப்பினும் ஒரு பவுலிங் அணியாக எங்களால் நீண்ட நேரம் பந்து வீச முடியும். எனவே அவர்களுடைய துடுப்பாட்டத்துக்கு நாங்கள் சவால் கொடுத்து வெல்வோம் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement