- Advertisement -
இந்திய கிரிக்கெட்

3வது டெஸ்டில் கிரேட் பும்ராவுக்கு சில பஞ்ச் கொடுப்பேன்.. 2 காரணம் இது தான்.. ஆஸி வீரர் மெக்ஸ்வீனி உறுதி

ஆஸ்திரேலியா – இந்தியா கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. அந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்திய அணியை இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அதனால் இந்திய அணிக்கு தக்க பதிலடி கொடுத்துள்ள ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் ஃபார்முக்கு திரும்பியுள்ளது.

மறுபுறம் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்றும் இரண்டாவது போட்டியில் படுதோல்வியை சந்தித்த இந்தியா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு செல்ல அடுத்து வரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக நாதன் மெக்ஸ்வீனி அறிமுகமானார். ஆனால் அறிமுகப் போட்டியிலேயே அவர் சுமாராக விளையாடி 0, 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

பும்ராவுக்கு பஞ்ச்:

இருப்பினும் 2வது போட்டியில் பும்ரா உள்ளிட்ட இந்திய பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்ட அவர் 39, 10* ரன்கள் எடுத்து வெற்றியில் பங்காற்றினார். இந்நிலையில் 2வது போட்டியில் பும்ராவை ஓரளவு எதிர்கொண்டு அனுபவத்தைப் பெற்றுள்ளதாக மெக்ஸ்வீனி கூறியுள்ளார். மேலும் பும்ராவை போன்ற தரமான பவுலரை எதிர்கொள்ள தமது கேரியரின் ஆரம்பத்திலேயே அற்புத வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதனால் 3வது போட்டியில் பும்ராவுக்கு சில பஞ்ச் கொடுக்க உள்ளதாகவும் மெக்ஸ்வீனி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எனது கேரியரில் ஆரம்பத்தில் ஜஸ்ப்ரித் போன்ற ஒரு பவுலரை எதிர்கொள்வது இதை விட கடினமாக இருக்கப் போவதில்லை. 2வது போட்டியில் அவரை எதிர்கொண்டதில் நான் நல்ல தன்னம்பிக்கையை எடுத்துக் கொண்டுள்ளேன். எவ்வளவு அதிகமாக அவரை எதிர்கொள்கிறேனோ அவ்வளவு அதிகமாக என்னால் அவருக்கு எதிராக கச்சிதமாக விளையாட முடியும்”

- Advertisement -

மெக்ஸ்வீனி நம்பிக்கை:

“தனித்துவ பவுலரான அவரை முதல் முறையாக எதிர்கொண்டது கொஞ்சம் சவாலாக இருந்தது. உலகத்தரம் வாய்ந்த அவர் மற்றவர்களை விட கொஞ்சம் சவாலாக இருக்கிறார். இவை அனைத்தும் அவருடைய கோணம் மற்றும் வெள்ளைக்கோட்டில் எங்கே பந்தை வெளியிடுகிறார் என்பதைப் பொறுத்தது. அடிலெய்டில் மீண்டும் என்னை அவுட்டாக்கிய பும்ரா கிரேட் பவுலர்”

இதையும் படிங்க: 105 ரன்ஸ்.. ஸ்மிருதி மந்தனா மாபெரும் உலக சாதனை.. ஆஸியிடம் செல்லாத இந்திய மகளிரணி ஆட்டம்

“இருப்பினும் அவரை அதிகமாக எதிர்கொள்ளும் போது இன்னும் நான் சிறப்பாக முன்னேறுவேன். அதனால் காபாவில் அவரை எதிர்கொள்ளும் போது அவருக்கு எதிராக இன்னும் சில பஞ்ச்களை கொடுப்பேன் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். இதை அடுத்து மூன்றாவது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் இருக்கும் காபா மைதானத்தில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -