பும்ராவை பெர்த் மைதானத்தில் அடிக்க இப்போவே இந்த திட்டத்தை ரெடி செஞ்சுகிட்டு இருக்கேன்.. ஆஸி வீரர் பேட்டி

Nathan mcsweeny
- Advertisement -

இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த ஊரில் இந்தியா ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற ஆஸ்திரேலியாவில் 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா விளையாட உள்ளது.

மறுபுறம் சரிவை சந்தித்துள்ள இந்திய அணியை தோற்கடித்து வெற்றி பெற ஆஸ்திரேலியா தயாராக உள்ளது. குறிப்பாக கடைசியாக விளையாடிய 2 தொடர்களில் தங்களுடைய சொந்த மண்ணில் தோல்வியை கொடுத்த இந்தியாவை இம்முறை வீழ்த்த ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திர துவக்க வீரர் டேவிட் வார்னர் இந்த வருடம் ஓய்வு பெற்றார்.

- Advertisement -

புதிய ஓப்பனர்:

அவருக்கு பதிலாக இம்முறை நாதன் மெக்ஸ்வீனி எனும் புதிய வீரர் ஓப்பனிங்கில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் சமீபத்தில் இந்தியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் அரை சதமடித்து அசத்தினர். இந்நிலையில் இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ராவை எதிர்கொண்டு பெரிய ரன்கள் குவிப்பதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக மெக்ஸ்வீனி தெரிவித்துள்ளார்.

இது பற்றி சென் ரேடியோவில் அவர் பேசியது பின்வருமாறு. “பெர்த் நகரில் நடைபெறும் முதல் போட்டிக்கு நான் செல்லும் போது ஆழமாக பயிற்சிகளையும் திட்டங்களையும் எடுத்துச் செல்வேன். இந்திய பவுலர்கள் எப்படி பந்து வீசுவார்கள் என்பதை அறிந்து கொள்ள நான் சில வீடியோக்களையும் பார்த்துள்ளேன். எனவே அவர்களை எவ்வாறு எதிர்கொண்டு அசத்த முடியும் என்பதை கற்பனை செய்து பார்க்க முயற்சிக்கிறேன்”

- Advertisement -

பும்ரா சவால்:

“புதிய பவுலர்களை அவர்களுடைய ஆக்சன் காரணமாக சிறப்பாக எதிர்கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கும். இருப்பினும் அதை செய்வதற்கு முன்பாக எனக்கு ஒரு வாரம் இடைவெளி இருக்கிறது. அதை பயன்படுத்தி இந்தியாவை சிறப்பாக எதிர்கொள்ள நன்கு தயாராக என்று நம்புகிறேன். இருப்பினும் பும்ரா எப்படி வீசுவார் என்பதை கணிப்பது கடினம்”

இதையும் படிங்க: 245 ரன்ஸ்.. சச்சினின் உலக சாதனையை சமன் செய்த குர்பாஸ்.. வங்கதேசத்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

“ஏனெனில் அவரிடம் தனித்துவமான பவுலிங் ஆக்சன் இருக்கிறது. அவர் உலகின் சிறந்த ஒரு பவுலர். எனவே அவரை பின்பற்றுவது மிகவும் கடினம். இருப்பினும் சரியான திட்டங்களை வைத்து அவர் உட்பட அனைவரையும் திறம்பட எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன். தற்போது நான் நன்றாக தயாராக இருக்கிறேன். இன்னும் நான் முன்னேறுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. எனவே என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement