
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் படுமோசமான தோல்வியை சந்தித்து பின்தங்கிய ஆஸ்திரேலிய அணி அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் போது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி கண்டிருந்தது.
இதன் காரணமாக இந்த தொடரானது முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் இருந்த வேளையில் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் முதல் இன்னிங்சில் பெரிய ரன் குவிப்பை வழங்கி ஆஸ்திரேலியா அணி அசத்தியிருந்தது.
இதன் காரணமாக மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் போட்டியின் பெரும்பாலான நேரம் மழை பெய்ததால் அந்த போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வி என்று டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது டிசம்பர் 26-ஆம் தேதி பாக்சிங் டே போட்டியாக மெல்போர்ன் நகரில் நடைபெற இருக்கிறது.
இந்த தொடரின் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் எஞ்சியுள்ள 2 டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான நாதன் மெக்ஸ்வீனி அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக 19 வயது வீரருக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
25 வயதான மெக்ஸ்வீனி இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரில் தான் அறிமுகமான வேளையில் முதல் மூன்று போட்டியோடு அவர் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார். ஏனெனில் இந்திய அணிக்கு எதிரான 6 இன்னிங்ஸ்களில் ஒருமுறை மட்டுமே 39 ரன்கள் குவித்தார். மற்றபடி 10 ரன்களுக்கு மேல் அடிக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.
இதையும் படிங்க : அஷ்வின் மாதிரி அதிரடியான முடிவை முகமது ஷமி எடுத்தாலும் ஆச்சரியமில்லை – விவரம் இதோ
இந்திய அணிக்கெதிரான இந்த முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் 14 ரன்கள் சராசரியுடன் மொத்தமாக 72 ரன்கள் மட்டுமே அடித்ததன் காரணமாக அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேறு வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்படி தான் அறிமுகமான முதல் தொடரின் மூன்று போட்டியோடு அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டது நிச்சயம் அவருக்கு வருத்தத்தை அளித்திருக்கலாம்.