4 டெஸ்ட் போட்டியா ? இது என்ன முட்டாள்தனம். ஐ.சி.சி யின் திட்டத்தை விமர்சித்த – பிரபல ஆஸி வீரர்

Lyon
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டின் கவனம் ரசிகர்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்த நேரத்தில் ஐசிசி கொண்டுவந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் டெஸ்ட் தொடரை காப்பாற்றும் நம்பிக்கையை கொடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஐசிசி திடீரென 4 நாள் டெஸ்ட் என்ற புதிய யோசனையை தெரிவித்து அதுகுறித்த தகவல்களை வெளியிட்டது.

lyon 1

- Advertisement -

இந்த யோசனைக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரம் நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் லயன் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : நான்கு நாள் டெஸ்ட் முட்டாள்தனமானது உலகின் பெரிய டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஆட்டங்கள் 5 ஆம் நாள் வரை சென்றுள்ளது.

2014 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி கடைசி நாள் ஆட்டம் டிராவாக இரண்டு ஓவர் இருக்கும்போது ஹாரிஸ், மோர்கல் என இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி மறக்க முடியாத வெற்றியை பெற்றது. அதே போன்று 2014 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான தொடரின் போது கோலி இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு அருகில் கொண்டு வந்தார்.

lyon 2

364 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி கோலி ஆட்டமிழந்ததால் 315 ரன்களுக்கு சுருண்டு தோல்வி கண்டது. ஆனால் அந்த போட்டி மிகப் பிரமாதமான ஒரு போட்டி ஆகும் எனவே அது போன்ற வரலாற்று போட்டிகள் 5 நாள் கிரிக்கெட் நடந்தால் மட்டுமே பார்க்க முடியும். நான்கு நாள் கிரிக்கெட்டில் எந்த அளவுக்கு முடிவுகள் கிடைக்கும் என்று தெரியாது. நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளின் மூலம் அதிக போட்டிகள் டிராவில் முடியும் என்பதால் இந்த ஐடியா ஒரு தேவையில்லாத முட்டாள்தனமான ஒன்று என்றும் லயன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement