- Advertisement -
இந்திய கிரிக்கெட்

10 வருஷ கணக்கு ஒன்னு பென்டிங்ல இருக்கு.. அதை இந்தமுறை முடிச்சிடுவோம்.. இந்திய அணியை எச்சரித்த – நாதன் லயன்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த உலக சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளி பட்டியலில் இந்திய அணி முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. இதன் காரணமாக நிச்சயம் இம்முறையும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் மோதும் என்று பலராலும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே கடந்த இருமுறை ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது இரண்டு முறையும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

அதனை தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருக்கிறது. அதே வேளையில் கடந்த இரண்டு தோல்விகளுக்கு பழி தீர்க்கும் விதமாக ஆஸ்திரேலிய அணியும் இந்திய அணியும் வீழ்த்தும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்த பார்டர் கவாஸ்கர் டிராபி குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான நாதன் லயன் கூறுகையில் : கடந்த 10 ஆண்டுகளாக தீர்க்கப்படாத கணக்கு ஒன்று கிடப்பில் உள்ளது. எங்களுடைய சொந்த மண்ணில் மீண்டும் நாங்கள் இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற்று அந்த குறையை தீர்ப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

- Advertisement -

இந்திய அணி சூப்பர் ஸ்டார்களை கொண்ட அணி. நிச்சயம் இந்திய அணிக்கு எதிராக எங்களுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். கடந்த சில ஆண்டுகளாகவே நாங்கள் வித்தியாசமான கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். இம்முறை இந்திய அணியின் இளம் துவக்க வீரரான ஜெய்ஸ்வால் குறித்து அதிகம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இதையும் படிங்க : கொல்கத்தா அணி என்னை வெளியேற்றினால் அந்த 2 அணிகளில் ஒன்றில் விளையாடுவேன் – ரிங்கு சிங் சுவாரசிய பதில்

அவருடைய ஆட்டத்தை நான் கவனமாக பார்த்து வருகிறேன். அவரது திறமை அபாரமானதுதான் இருப்பினும் இந்த தொடரில் அவரை வீழ்த்தி இந்த டெஸ்ட் தொடரை வெல்வோம் என நாதன் லயன் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -