இந்திய வீரரான அஷ்வினிடம் இருந்துதான் நான் இதனை கற்றுக்கொண்டேன் – நாதன் லயன் ஓபன் டாக்

Lyon
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக தற்போது பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. இதன் முதல் போட்டி பர்மிங்காமில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களை குவித்தது. ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்தார்.

Aus vs Eng

அதன்பிறகு இங்கிலாந்து அணி தற்போது முதல் இன்னிங்சில் இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து சார்பாக பர்ன்ஸ் சதமடித்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளரான நாதன் லயன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

- Advertisement -

இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு மைதானங்களில் அதுவும் குறிப்பாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் மைதானங்களில் பந்து வீசுவது கடினம். ஆனால் நான் இந்திய அணியின் வீரரான அஸ்வின் இது போன்ற வெளிநாட்டு தொடர்களில் பந்துவீசும் போது அவரின் சிறப்பான பந்துவீச்சை பார்த்து அசந்து உள்ளேன். ஏனெனில் அஸ்வின் அந்த அளவுக்கு அது போன்ற மைதானங்களில் சிறப்பாக பந்து வீசுவார்.

ashwin 2

அவரின் பந்துவீச்சு வீடியோக்களை பார்த்து நான் இங்கிலாந்து மைதானங்களில் எவ்வாறு பந்து வீச வேண்டும். பந்துவீச்சில் வேரியேஷன் எந்தெந்த வகையில் வீச வேண்டும் என்பது போன்று பல விடயங்களை கற்றுக் கொண்டேன். இது குறித்து நான் அஷ்வினிடமும் பேசி இருக்கிறேன் என்று லயன் கூறினார்.

ashwin india

இதுவரை 343 டெஸ்ட் விக்கெட்டுகளை நாதன் லயன் வீழ்த்தியுள்ளார். லயனை விட ஒரு விக்கெட்டை அஸ்வின் குறைவாகவே எடுத்து இருந்தாலும் 21 போட்டிகள் குறைவாக 342 விக்கெட்களை அஸ்வின் வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement