ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது டிசம்பர் 16-ஆம் தேதி அடிலெய்டு நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி தங்களது முதல் இன்னிங்சில் 371 ரன்கள் குவித்தது.
கிளென் மெக்ராத்தை பின்னுக்கு தள்ளிய நாதன் லயன் :
ஆஸ்திரேலியா அணி சார்பாக அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 106 ரன்களையும், உஸ்மான் கவாஜா 82 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது இரண்டாம் நாளில் மூன்றாவது செஷன் வரை 8 விக்கெடுகளை இழந்து 213 ரன்களை குவித்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலியா அணி சார்பாக விளையாடி வரும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான கிளென் மெக்ராத்தின் ஆல் டைம் சாதனை ஒன்றினை தவிர்த்துள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நடைபெற்று வரும் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நாதன் லயன் தனது 141-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில் இன்றைய போட்டியில் அவர் எடுத்த 2 விக்கெட்டுகளோடு சேர்த்து டெஸ்ட் போட்டிகளில் 564 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
அதாவது டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த கிளென் மெக்ராத்தை(563) பின்னுக்கு தள்ளி ஆறாவது இடத்தை நாதன் லயன் பிடித்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும் ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக ஷேன் வார்ன் முதலிடத்தில் இருக்கும் வேளையில் இரண்டாவது வீரராக தற்போது நாதன் லயன் இணைந்துள்ளார்.
இதையும் படிங்க : அம்பயர்கள் எடுத்த இந்த முடிவு ரொம்ப தப்பு.. 4 ஆவது போட்டி ரத்து செய்யப்பட்டது குறித்து – ராபின் உத்தப்பா அதிருப்தி
ஒட்டுமொத்தமாக முரளிதரன்(800) டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக முதலிடத்தில் இருக்கும் வேளையில் இந்த பட்டியலில் தற்போதைய நிலையில் ஆறாவது இடத்தில் இருக்கும் அவர் நான்காவது இடத்திற்கு முன்னேறுவதற்கான பிரமாதமான வாய்ப்பு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



