
வரலாற்று சிறப்புமிக்க 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பரில் துவங்குகிறது. அந்தத் தொடரில் 1992க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரில் வெல்லப்போவது யார் என்ற இப்போதே எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
அதில் கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் வென்ற இந்தியா சரித்திர சாதனை படைத்தது. எனவே இம்முறையும் வென்று ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது. மறுபுறம் 2014க்குப்பின் இந்தியாவுக்கு எதிராக ஒரு முறை கூட பார்டர் – கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்லவில்லை.
எனவே அதற்கும் சேர்த்து இம்முறை இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. இந்நிலையில் அந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவித்தால் விராட் கோலி, ரிஷப் பண்ட் போன்ற இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களால் வீழ்த்த முடியும் என அந்நாட்டின் ஸ்பின்னர் நேதன் லயன் கூறியுள்ளார். மேலும் இம்முறை இந்தியாவை 5 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்று அவர் உறுதியான நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி வில்லோ டால்க் யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “எங்களுக்கு பெரிய ரன்கள் தேவை. பெரிய சதங்கள் அடிப்பதற்கான திறமையான பேட்ஸ்மேன்கள் எங்களிடம் உள்ளனர். ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்ஷேன், டிராவிஸ் ஹெட் ஆகியோர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 101 அல்லது 107 ரன்கள் அடிப்பதை நான் விரும்பவில்லை. மாறாக அவர்கள் 180 அல்லது 200 ரன்கள் அடிக்க விரும்புகிறேன்”
“சில நாட்கள் இடைவெளி எடுத்து வந்தால் என்னுடைய அணியின் வெற்றியில் என்னால் பங்காற்ற முடியும் என்று உறுதியாக சொல்வேன். ஜெய்ஸ்வால் எப்படி விளையாடுகிறார் என்பதைப் பற்றி இங்கிலாந்தின் டாம் ஹார்ட்லியிடம் பேசி கேட்டறிந்தேன். மிடில் ஆர்டரில் சர்பராஸ் அல்லது ராகுல் வருவாரா என்பது தெரியவில்லை. இந்தியா முழுவதும் சூப்பர்ஸ்டார்களை கொண்ட வீரர்களாகும்”
இதையும் படிங்க: தோனி, ரோஹித், ரெய்னா, கோலிக்கு இடமில்லை.. தனது ஆல் டைம் கனவு ஐபிஎல் அணியை வெளியிட்ட கம்பீர்
“விராட் கோலி அங்கே இருப்பார். ரிசர்வ் பண்ட் வங்கதேச தொடரில் விளையாட உள்ளார். எனவே அந்த 5 போட்டிகள் கொண்ட தொடர் பெரிதாகி வருகிறது. அதனால் டெஸ்ட் போட்டிகள் இறப்பதாக மக்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நாங்கள் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்களாகி விட்டது. அதைப்பற்றி இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய போதே நான் சிந்திக்கத் துவங்கினேன். எனது கண்களை நீண்ட காலமாக வைத்துள்ளேன். இம்முறை ஆஸ்திரேலியா 5 – 0 என்ற கணக்கில் என்று நான் கணிக்கிறேன்” எனக் கூறினார்.