31614 பந்துகள்.. 501 விக்கெட்ஸ்.. ஒரே ஒரு தவறு கூட செய்யாமல் நேதன் லயன் படைத்த வரலாற்று சாதனை

Nathan Lyon 500
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டிசம்பர் 14ஆம் தேதி பெர்த் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா டேவிட் வார்னர் 164 ரன்கள் எடுத்த உதவியுடன் 487 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது.

பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அமீர் ஜமால் 6 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி 271 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இமாம்-உல்-ஹக் 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

- Advertisement -

வேற லெவல் ஸ்பின்னர்:
இறுதியில் 216 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா உஸ்மான் கவாஜா 90 ரன்கள் எடுத்த உதவியுடன் 450 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதைத் துரத்திய பாகிஸ்தான் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 89 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஆஸ்திரேலியா மண்ணில் தொடர்ந்து 28வது வருடமாக தோல்வியை சந்தித்தது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஹேசல்வுட், மிட்சேல் ஸ்டார்க் தலா 3 விக்கெட்களை சாய்த்தனர்.

முன்னதாக இந்த போட்டியில் 2 இன்னிங்சிலும் சேர்த்து மொத்தமாக 5 விக்கெட்களை எடுத்த நேதன் லயன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷேன் வார்னே (708), கிளேன் மெக்ராத் (563) ஆகியோரை தொடர்ந்து 500 விக்கெட்டுகளை எடுத்த 3வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனை படைத்தார். மேலும் முத்தையா முரளிதரனுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்த 2வது ஆஃப் ஸ்பின்னர் என்ற வரலாற்றை படைத்த அவர் ஷேன் வார்னேவுக்கு பின் 500 விக்கெட்களை எடுத்த 2வது ஆஸ்திரேலிய ஸ்பின்னர் என்ற பெருமையும் பெற்றார்.

- Advertisement -

அதை விட கடந்த 2011இல் தம்முடைய கேரியரை துவக்கிய நேதன் லயன் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 123 போட்டிகளில் 230 இன்னிங்ஸில் 31614 பந்துகளை வீசி 501* விக்கெட்களை எடுத்துள்ளார். ஆனால் இந்த 31614 பந்துகளில் அவர் ஒருமுறை கூட வெள்ளைக்கோட்டுக்கு வெளியே காலை வைத்து நோ பாலை வீசியதில்லை என்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

இதையும் படிங்க: 200 பந்துகள்.. முதல் போட்டியிலேயே சாதித்த சாய் சுதர்சன்.. தெ.ஆ மண்ணில் இந்தியா பெரிய சாதனை வெற்றி

அந்த வகையில் வாழ்நாளில் தவறிப் போய் ஒரு முறை கூட நோபால் வீசாத அவர் 501 விக்கெட்களை எடுத்து நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவான் ஸ்பின்னராக சாதனை படைத்துள்ளதற்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். அவரும் வார்னேவுக்கு பின் நிரந்தர ஸ்பின்னராக இடம் பிடித்து ஆஸ்திரேலியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement