இந்தியா, இங்கிலாந்தில் இதை செய்யாம அஸ்வின் மாதிரி ரிட்டையராக மாட்டேன்.. 2027 பற்றி லயன் அறிவிப்பு

Nathan Lyon
- Advertisement -

நவீன டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் ஆகியோர் சிறந்த சுழல் பந்து வீச்சாளர்களாக போற்றப்படுகிறார்கள். 2011ஆம் ஆண்டு ஒரே வருடத்தில் ஜோடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர்கள் இருவருமே 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளனர். குறிப்பாக 2012 – 2024 வரை சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் தோற்காமல் இருக்க அஸ்வின் முக்கிய பங்காற்றினர்.

முத்தையா முரளிதரனுக்கு நிகராக அதிக தொடர்நாயகன் விருது வென்று உலக சாதனை படைத்துள்ள அஸ்வின் இந்தியாவுக்காக அனில் கும்ப்ளேவுக்கு பின் 2வது அதிக விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அப்படிப்பட்ட அவர் இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஆஸ்திரேலிய தொடரின் பாதியிலேயே அஸ்வின் திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தது ராசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

- Advertisement -

இந்தியா, இங்கிலாந்து:

மறுபுறம் ஷேன் வார்னேவுக்குப் பின் ஆஸ்திரேலியாவுக்கு நிறைய வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்து வரும் நேதன் லயன் இதுவரை 138 போட்டிகளில் 556* விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்வதற்கும் லயன் முக்கிய பங்காற்றினார். தற்போது 37 வயதாகும் அவர் இன்னும் சில வருடங்களில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தம்முடைய வாழ்நாளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர்களை வெல்ல வேண்டும் என்று லயன் கூறியுள்ளார். அதைச் செய்யாமல் அஸ்வின் போல அவசரப்பட்டு ஓய்வு பெறப்போவதில்லை என்று மறைமுகமாக தெரிவிக்கும் லயன் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை விளையாட உள்ளதாக கூறியுள்ளார். இது பற்றி லயன் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஓய்வு பற்றி லயன்:

“எப்போதும் நான் இந்தியாவில் வெற்றி பெற விரும்புகிறேன் என்று சொல்லி வருகிறேன். இங்கிலாந்திலும் நான் வெற்றி பெற விரும்புகிறேன். அந்த வாய்ப்பு சில வருடங்களில் எங்களுக்கு இருக்கிறது. அதே சமயம் நாங்கள் ஒவ்வொரு போட்டியாக எடுத்துக்கொண்டு தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் தொடரை வெல்ல முயற்சிப்போம். அடுத்ததாக எங்களது சொந்த ஊரில் மிகப்பெரிய ஆஷஸ் தொடர் நடைபெறுகிறது”

இதையும் படிங்க: அவர் பேட்டிங் பண்ண வந்தா எல்லாரும் டிவி ஆன் பண்ணி பாக்கலாம்.. பக்கா என்டர்டெயினர் – ஹாரி ப்ரூக் பேட்டி

“அப்படியே என்னுடைய கேரியரில் மற்றுமொரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் அட்டையாக இருக்கலாம்” என்று கூறினார். அடுத்ததாக 2027ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலியா 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அத்தொடர்களில் விளையாடி வெற்றி பெற்ற பின்பே ஓய்வு பெறுவேன் என்ற லயன் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement