Australia : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நாங்கள் இப்படியே பந்துவீச இருக்கிறோம் – குல்டர் நைல்

உலக கோப்பை தொடரின் நான்காவது போட்டி நேற்று கவுண்டி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய

Coulternile
- Advertisement -

உலக கோப்பை தொடரின் நான்காவது போட்டி நேற்று கவுண்டி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதின.

afh

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 38.2 ஓவர்களில் 207 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக நஜிபுல்லா 51 ரன்களை அடித்தார். ரஷீத் கான் அதிரடியாக ஆடி 3 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பிறகு 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வார்னர் ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் குவித்தார். பின்ச் 66 ரன்களை குவித்தார். ஆட்டநாயகனாக வார்னர் தேர்வானார்.

Warner

இந்த வெற்றிக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் குல்டர் நைட் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி அடைந்து. தற்போது அந்த அணி பலமாக இருக்கிறது அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் அதிகமாக ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி எதிரணியை திணறடிக்கின்றனர் ஆனால் நாங்கள் அவர்களுக்கு எதிராக எங்களது பவுன்சர் பந்து வீச்சின் மூலம் அவர்களை திணற வைத்து நாங்கள் யார் என்பதை நிச்சயம் நிரூபிப்போம்.

இதனை நாங்கள் அவர்களுக்கு அதிர்ச்சி வகையில் சிகிச்சை அளிக்க உள்ளோம் என்று கூறினார். வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக பாகிஸ்தானை சிறப்பாக வீழ்த்தி பந்தாடியது. மேலும், இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிரபலமான வீரர்கள் பலர் உள்ளதால் அந்த அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரு துறைகளிலும் பலமாக விளங்குகிறது. இந்த தொடரிலும் விண்டீஸ் அணி முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் அணி என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement