அடுத்த 6 மாசத்துக்கு இவரால் கிரிக்கெட் விளையாடவே முடியாது. நிரந்தர இடத்தை பிடிக்கும் நட்டு – விவரம் இதோ

Nattu
- Advertisement -

2020 ஐபிஎல் தொடரில் கலக்கிய தமிழகத்தைச் சேர்ந்த தங்கராசு நடராஜன் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்திலும் கலக்கிக் கொண்டு வருகிறார். கடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக களமிறங்கிய இவர் 16 போட்டிகளில் பங்கு பெற்றார். இதில் இவர் தனது யார்க்கர் பந்துவீச்சின் மூலம் 16 விக்கெட்களை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருந்தார். இதன் மூலம் நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார்.

Nattu-2

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் தொடரில் தமிழக வீர நடராஜன் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட நடராஜன் தனது முதல் சர்வதேச ஆட்டத்திலேயே 2 விக்கெட்களை பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதன் மூலம் டி20 தொடரிலும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த டி20 தொடரில் ஆஸ்திரேலிய ஜாம்பவான்களின் விக்கெட்களை பெற்று இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்திருந்தார் நடராஜன் .

- Advertisement -

இந்த ஆஸ்திரேலிய தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இவர் மொத்தம் 8 விக்கெட்களை பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்ததால் தற்போது டெஸ்ட் போட்டிக்கான வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் முகமது சமிக்கு காயம் ஏற்பட்டதால் தமிழக வீரர் நடராஜன் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

nattu 1

ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் இடம்பெற்றதால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தற்போது உமேஷ் யாதவ் அடைந்த காயம் காரணமாக அவர் மூன்றாவது போட்டியில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக வெளியேறிய இந்திய பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் இன்னும் ஆறு மாதங்களுக்கு இந்திய அணியில் விளையாட மாட்டார் என்ற ஒரு அறிக்கை சமீபத்தில் வெளியாகியிருந்தது.

Nattu

புவனேஷ்வர் குமார் 2021 ஐபிஎல் தொடரில் தான் இனி விளையாட முடியும் என்று அறிவித்துள்ளனர். இதனால் வருகின்ற டி20 உலக கோப்பை தொடரில் தங்கராசு நடராஜன் புவனேஸ்வர் குமாரின் மாற்று வீரராக களமிறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி அடுத்த 6 மாதத்திற்கு தங்கராசு நடராஜன் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிப்பார் என்று அனைவரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement